மகாநதி சீரியல் காவிரி யார் தெரியுமா? அழகி பட்டமும் கைவசம் இருக்கு.!இத்தனை திறமைகளாம்..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் காவிரி கேரக்டரில் நடித்து வருபவரின் நிஜ பெயர் லட்சுமி பிரியாதானாம்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமி பிரியா அழகி பட்டமும் பெற்றிருக்கிறாராம்.

அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான மகாநதி சீரியல் தற்போது டிஆர்பியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பா சென்டிமென்ட் அதிகம் உள்ள இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்து ஜி பி முத்து கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுது இருந்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது சின்ன திரையில் அதிகமான குடும்ப ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் காவிரி கேரக்டரை சொல்லவே வேண்டாம். இவருடைய துறுதுறுப்பான கேரக்டர், போல்டான ஆக்டிவ் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. மொத்த குடும்பத்தையும் தூக்கி சுமக்கும் ஒரு கேரக்டராக காவிரி இருந்து வருகிறார். காவிரியை சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ பண்ணி வருகிறார்கள். இந்த சீரியலில் காவிரி ஆக நடிக்கும் நடிகையின் பெயர் லட்சுமி பிரியா தானாம்.

ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது மாடலிங் பண்ணுவதற்காக ரொம்பவே ஆசைப்பட்டு இருக்கிறார். அதனால் தான் காலேஜ் முடித்ததும் இவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாடலிங் டான்ஸ் என்று பல துறைகளில் காலேஜுக்கு பிறகு முழு நேரமாக இவர் இருந்திருக்கிறார்.
அப்போதுதான் ஐ கேர் மிஸ் மிராக்கி என்னும் அழகி பட்டத்துக்கான போட்டியில் கலந்துகொண்டு, இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த வெற்றிக்குப் பிறகு பல பத்திரிகைகளின் மேகசீனில் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு இவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அதோடு தொடர்ந்து பல ஃபேஷன் ஷோ மற்றும் போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பிரபலமான நபராக மாறி இருக்கிறார்.
மாடலிங் துறையில் இவர் அதிகமாக பேமஸ் ஆக தொடங்கிய நேரத்தில் தான் இவருக்கு தமிழில் ட்ரிப் என்கிற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் சின்னதாக இருந்ததாலும் அதற்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடைசியாக இவர் பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு கருணாகரன் போன்றோர் நடித்திருந்தனர்.
முதல் முறையாக லட்சுமி பிரியா மகாநதி சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். முதல் சீரியல் இவருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். தற்போது அவருடைய பெயரில் சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி வைத்திருக்கின்றனர். அவருடைய சின்ன சின்ன கிளிப்ஸ்கள் கூட அவருடைய பேன்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் தெறித்து விட்டு வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications