பணத்துக்காக இப்படியா? கேவலம்! பேரனையாவது விட்டு வைங்க! ரோபோ சங்கர் பற்றி ப்ளூசட்டை மாறன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் பற்றி அவருடைய புகைப்படத்தோடு ப்ளூ சட்டை மாறன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் ரோபோ சங்கருக்கு காமெடி செய்ய தெரியாது, யூடியூப் சேனல்களில் வரும் பணத்திற்கு தன்னுடைய மொத்த குடும்பத்தையும் யூட்யூபில் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். ரோபோ சங்கர் பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்க்கு இணையத்தில் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

திரைப்படங்களை ரிவ்யூ செய்கிறேன் என்கிற பெயரில் அதிகமான திரைப்படத்தையும் குறையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் இன்று திரைப்படத்தை ரிவ்யூ செய்யாமல் ரோபோ சங்கர் பற்றி ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். ரோபோ சங்கருக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்து என்பதுதான் பலருடைய கேள்வி. ரஜினி, அஜித் படம் வெளியாகும் போது அவரை தாத்தா என்று கிண்டல் செய்வதும் அவரை கிழவன் என்று வசைப்பாடும் ப்ளூ சட்டை மாறன் இப்போது ரோபோ சங்கரையும் நீங்க தாத்தா ஆகிட்டீங்க இனியாவது கொஞ்சம் மெச்சுரா நடந்துக்கோங்க என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Robo Shankar BlueSattai Maaran

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்

ப்ளூ சட்டை மாறன் இன்று வெளியிட்ட பதிவில், "போதும் ரோபோ சங்கர். உங்க இம்சை தாங்கல கதறும் மக்கள்" என்று தொடங்கி இருக்கிறார். பிறகு, "விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து பெயர் வாங்கினார் ரோபோ சங்கர் ஆனால் தனித்துவமாக காமெடி செய்ய தெரியாதவர். தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுவது போல் நடிப்பதே காமெடி என நம்பி பல படங்களில் மொக்கை போட்டார். காலைல கோழி கூவுற (வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம்) காமெடி ஒன்றுதான் இவருக்கான ஒரே அடையாளம்.

செலிப்ரிட்டி குடும்பம்

இவரது காமெடி எடுப்படாததால் சிவகார்த்திகேயன் இவரை கழற்றிவிட்டார். அதற்கு பிறகு youtube சேனல்கள் இவரை மொத்தமாக லீசுக்கு எடுத்து விட்டன. மருமகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அனைத்து வீடியோக்களிலும் தோன்றினர். கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணி நேரமும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக போட்டு அறுக்கிறார்கள். எந்த புது படம் வந்தாலும் அதன் செலிப்ரிட்டி ஷோவுக்கு மொத்த குடும்பத்துடன் ஆஜராகி விடுகிறார்.

புளூசட்டை மாறன் பதிவு

தற்போது இவர் தாத்தா ஆன பிறகு இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது. பணம் வருகிறது என்பதற்காக 24 மணி நேரமும் உங்கள் குடும்பத்தின் சாதாரண நிகழ்வுகளை கூட வீடியோவாக காட்டுவது கூச்சமாக இல்லையா? தயவுசெய்து உங்கள் பேரணையாவது இந்த போலி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள்.

ரோபோ சங்கருக்கு ஆதரவு

செலப்ரட்டி என்னும் பெயரில் உங்களை பிடித்துள்ள இந்த பப்ளிசிட்டி மோகம் எரிச்சலை மட்டுமே தருவதாக பலர் கூறுகிறார்கள். தாத்தா ஆன பிறகும் திருந்தாவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று ரோபோ சங்கர் புகைப்படத்தையும் அந்த பதிவு பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி விமர்சித்து கமெண்ட் போட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு நெட்டிசன் "நீங்களும் பெரியவர் தானே மூவி ரிவ்யூ பெயர்ல எரிச்சல் ஆக்குற மாதிரி வீடியோஸ் போடுறீங்க? அதுக்கு என்ன பண்ணலாம் நான் உங்க வீடியோஸ் எல்லாம் அவாய்ட் பண்ற மாதிரி நீங்களும் அவாய்ட் பண்ணுங்க பெரியவரே. அவர் காசுக்காக பண்றாரு சரி நீங்க எதற்கு வீடியோல ஸ்பான்சர் ஷிப் ஆட் பண்றீங்க? மக்கள் சேவையா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் உங்க ஐம்பது வயசு பெரியவர் எப்படா பிரஸ்மீட் கொடுப்பாரு என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.

ரசிகரின் பதிலடி

இதுபோல இன்னொரு ரசிகர் யாருக்கும் பிடிக்கலன்னு தெரிஞ்சும் நீ இன்னும் சினிமா விமர்சனத்தை நிறுத்தல செலிபிரிட்டிஸை வம்பு இழுக்கிறதை நிறுத்தல. நாங்க ஏதாவது பீல் பண்றோமா எப்படியோ தொலையட்டும்னு விடல. உனக்கு ஏன் இந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு என்னடா அங்க சத்தம் என்று ப்ளூ சட்டை மாறன் கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் வாக்குவாதம்

அதுபோல இன்னொரு ரசிகர், யோவ் உனக்கு என்னய்யா அவங்க குடும்பம், அவங்க வீடியோ போடுறாங்க உனக்கு பிடிக்கலையா பார்க்காத உனக்கு பொறாமை. உன்னோட சேனலை யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க என்று, அவர் போடுற கண்டன்ட் பிடிக்காததால் தான் உனக்கு வயிறு எரியுது என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதற்கு "நீ தான் கேமராமேனா? இந்த கொதி கொதிக்கிற மூடிட்டு போடா" என்று ப்ளூ சட்டை மாறன் பதில் கொடுத்திருக்கிறார்.

தொடரும் கமெண்ட்ஸ்

இப்படியாக பல கமெண்ட்கள் வருகிறது அதில் அதிகமான கமெண்ட்கள் உங்களை யாரும் வலுக்கட்டாயமாக அவர்களுடைய வீடியோவை பார்க்க சொல்லவில்லை. விருப்பம் உள்ளவர்கள் பார்க்கிறார்கள் விருப்பமில்லை எனில் பார்க்க வேண்டாம் அவ்வளவுதான். இந்த காட்சிகளால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா என்ன? உங்களுக்கு ஏன் இவ்வளவு வயித்தெரிச்சல? நீங்கள் ஒரு படம் வெளியாகும் போது அதை விமர்சனம் செய்கிறீர்கள் நீங்கள் எடுக்கும் திரைப்படத்தை யாராலும் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆனால் அந்த படம் நல்ல படம் என்று சொன்னீர்கள். மக்களுக்கு பிடித்த பல படங்களை நீங்கள் குறையை மட்டும் தானே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இப்படியாக இன்று ப்ளூ சட்டை மாறன் ரோபோ சங்கரை வைத்து விவாதத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கு ரோபோ சங்கர் தரப்பிலிருந்து என்ன பதில் கிடைக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ப்ளூ சட்டை மாறன் சொன்ன கருத்து பற்றி உங்களுடைய கருத்து என்ன பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+