கூலி ட்ரெய்லரில் வரும் காக்கா.. விஜய் மீதான பயமும், எரிச்சலும்.. கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூலி படத்தின் ட்ரெய்லரின் இறுதிக் காட்சியில் காக்கா சத்தத்தை கலாய்ப்பது போல் ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சி குறித்து ப்ளூசட்டை மாறன் கூறியுள்ள கருத்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிக்கு விஜய் மீதான எரிச்சலும், பயமும் தெளிவாகக் கூறியுள்ள அவர், இப்படிப் புலம்புவதை நிறுத்துங்கள் என்றும் கூறி இருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்தில் இருந்து சோபின், இந்தியில் இருந்து ஆமிர் கான், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Blue Sattai Maran Mocks Rajinikanth

இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல் இரவு 7 மணிக்குக் கூலி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிக்கு மிகப்பெரிய பில்டப் கொடுப்பதோடு, 30 ஆண்டுகளாக ஒருத்தனை ஆஃப் லைனில் வைத்துள்ளேன் என்று சத்யராஜ் பேசும் வசனமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதேபோல் ட்ரெய்லரின் இறுதியில் காக்கா சத்தத்தைக் கேட்டு ரஜினிகாந்த் கலாய்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஏனென்றால் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கழுகு, காக்கா என்று ரஜினி மறைமுகமாக விஜயை விமர்சித்ததாகப் பார்க்கப்பட்டது. அதற்கு விஜய், லியோ வெற்றி விழா கொண்டாட்டத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

இதன்பின் லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயை அப்படிக் கூறவில்லை என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் கூலி ட்ரெய்லரின் கடைசி காட்சி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களை சீண்டுவதற்காகவே இப்படியொரு காட்சி ட்ரெய்லரில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனைப் பகிர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் விஜய் ரசிகர்களை சீண்டி வருகின்றனர். இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், கூலி ட்ரைலரின் இறுதியில் காக்கா சத்தத்தைப் பார்த்து அதைக் கலாய்ப்பது போல நடித்துள்ளார் தலீவர்.‌ அதற்கு முன்பு வரும் வசனத்திலும் விஜய்யை சீண்டியுள்ளார். 'இந்த தேவாவை பத்தி தெரிஞ்சிருந்தும் எங்கிட்டயே விளையாடி இருக்க' என்பதுதான் அந்த வசனம்.

விஜய் மீதான‌ கோவமும், எரிச்சலும், பயமும் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் விஜய் ஜெயித்தாலும் இவருக்குப் பிடிக்காது. மீண்டும் நடிக்க வந்தாலும் இவருக்குப் பிடிக்காது. செமத்தியாக Check and mate வைத்துள்ளார் விஜய். இதையெல்லாம் பார்த்தால் அவர்தான் கழுகு‌. இவர்தான் காக்கா. இனியாவது இப்படி புலம்பறதை நிறுத்துங்க தலீவரே என்று பதிவிட்டுள்ளார். இது இரு நடிகர்களுக்கு இடையிலும் மீண்டும் மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+