விஜய் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தது தீபாவளி துப்பாக்கி! அதை நம்பி இறங்கிட்டாரு! கலாய்க்கும் ப்ளூசட்டை மாறன்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொகுப்பாளராக இருந்து, இப்போது ரஜினி, விஜய் ரேஞ்சுக்குத் தன்னைப் பார்க்கணும்னு ஆசைப்படுற ஒரே ஆள் சிவகார்த்திகேயன் தான். இவரின் ராக்கெட் வளர்ச்சியைப் பார்த்து, இவருக்கு முன்னாடியே வந்த சீனியர் நடிகர்கள் எல்லாம் பொறாமைப்பட்டாங்கன்னுதான் சொல்லணும். ஆனா, "எனக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை"ன்னு அவர் செட்டுகள் செய்து கொண்டிருக்கிறார் என்று ப்ளூசட்டை மாறன் பதிவு போட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயனோட இந்த 'திடீர்' வளர்ச்சியை, சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் சும்மா விடலை. "திடீர் தளபதி கடந்து வந்த பாதை"ங்கிற தலைப்புல நம்ம எஸ்.கே-வை நக்கலடிச்சு சில பாயிண்ட்ஸ்களைப் போட்டுத் தாக்கியிருக்காரு. அது என்னன்னு பார்ப்போம் வாங்க!
டிவியில் இருந்து திடீர் தளபதி
சிவகார்த்திகேயன் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர். விஜய் டி.வி-யில 'அது இது எது' ஷோ மூலம் ஃபேமஸாகி, சில படங்கள்ல காமெடி நடிகராக நடிச்சு, ஒரு கட்டத்துல காமெடி ஹீரோவாக உயர்ந்தார். ஆனா, அவருக்கு காமெடி எல்லாம் பத்தல, தனக்கு ஒரு சீரியஸான ஆக்சன் ஹீரோ இமேஜ் வேணும்னு ஆசைப்பட்டார். ஆனா, அது நடக்கல.
இடையில திடீர்னு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதுல 'கனா' படம் மட்டும்தான் தேறியது. *நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, 'வாழ்', 'கொட்டுக்காளி'ன்னு தயாரிச்ச மத்த படமெல்லாம் மண்ணைக் கவ்வியது.
டாக்டர், டான் கொடுத்த லிஃப்ட்
நம்ம எஸ்.கே-வின் மார்க்கெட்டை மறுபடியும் தூக்கிவிட்டதுன்னா அது 'டாக்டர்' மற்றும் 'டான்' படங்கள் தான்! இந்தப் படங்களை வச்சு ஒருவழியா மார்க்கெட்டைப் பிடிச்சார். ஆனா, அந்தப் பரபரப்பு நீடிக்கலை! அடுத்து வந்த 'பிரின்ஸ்', 'மாவீரன்', 'அயலான்' போன்ற படங்கள் தோல்வியைச் சந்திச்சுச்சு.
இப்படியே போய்க்கிட்டு இருக்கறப்பத்தான், விஜய் நடிச்ச 'கோட்' படத்துல இருந்து துப்பாக்கியை வாங்கி, டக்குனு 'திடீர் தளபதி'யா மாறப் பார்த்தார்னு கிண்டல் பண்றாரு மாறன்.
சமீபத்துல வந்த 'அமரன்' படம்தான் இவருக்கு ஒரு பெரிய ஹிட். ஆனா, அதுல சாய் பல்லவியோட அசத்தலான நடிப்புதான் படத்துக்குப் பெரிய பலம்னு சினிமா வட்டாரத்துல பேசுறாங்க. அதாவது, "பக்கத்து இலைக்குப் பாயாசம்"ங்கிற மாதிரி அந்த வெற்றி சிவகார்த்திகேயனுக்குக் கொஞ்சம் உதவியிருக்கு! என்று ப்ளூசட்டை கலாய்த்து இருக்கிறார்.
எஸ்.கே-வின் பில்டப்
'அமரன்' வெற்றி கிடைச்சதும், இவர்தான் 'அடுத்த விஜய்'னு தியேட்டர் அதிபர்களும், சினிமா வல்லுனர்களும் இவரைக் கொம்பு சீவி விட்டுட்டாங்க. அதையும் உண்மைன்னு நம்புன நம்ம எஸ்.கே, சமூக வலைதளங்கள்ல குறுக்கும் மறுக்கமா ஓட ஆரம்பிச்சுட்டார்! ஏகப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இறக்கினார். திடீர்னு நல்லகண்ணு அய்யாவைச் சந்திப்பது, ஐ.பி.எல். போட்டியைப் பார்ப்பதுன்னு பல ரகமான போட்டோக்களைப் போட்டு அட்டகாசம் பண்ணினார்.
இதுல உச்சகட்ட காமெடி என்னன்னா, சின்ன பட்ஜெட்ல ஹிட் கொடுத்த படக்குழுவை எல்லாம் தனது அலுவலகத்துக்கு வரவழைச்சு, தான் ஒரு கிழக்கு கடற்கரைப் பண்ணையார் மாதிரி அவங்களைப் பாராட்டினார். இந்தக் 'கிழக்கு கடற்கரைப் பண்ணையார்' சேட்டைக்குச் சமூக வலைதளங்கள்ல தர்ம அடி விழவே, அந்தச் சேட்டையை நிறுத்திட்டார்!
பொங்கல் ரேஸ்
'அமரன்' படத்துக்குப் பிறகு, மதராஸி படத்துல மறுபடியும் ஆக்சன் ஹீரோவா வந்த எஸ்.கே-வுக்கு அங்கேயும் அடிதான்! இந்தப் படத்துல சாய் பல்லவியோ, சூரியோ கூட இல்ல. அதனால படம் 'பப்படம்' ஆகிடுச்சு! இந்தத் தோல்வியால, "விஜய் தமக்குக் கொடுத்தது அசல் துப்பாக்கியா? இல்லை கலாய்க்கிறதுக்குக் கொடுத்த தீபாவளித் துப்பாக்கியா?"ன்னு இப்போ யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு நம்ம திடீர் தளபதி.
ஆனா, இப்போ வர்ற பொங்கலுக்கு, 'பராசக்தி' படம் மூலம் விஜயின் 'ஜனநாயகன்' படத்துக்கூட மோதுறாராம். கடைசியா, புளூ சட்டை மாறன் வெச்ச நக்கல் கேள்வி இதுதான்: "பொங்கலுக்கு திடீர் தளபதியின் துப்பாக்கி வெடிக்குமா? வீ ஆர் வெயிட்டிங்!"
இந்த விமர்சனங்களைப் பார்த்த பிறகு, சிவகார்த்திகேயன் இன்னும் 'ஆக்சன் ஹீரோ' இமேஜை நோக்கிப் போவது அவருக்குச் சரியான முடிவா இருக்கும்னு நினைக்கிறீங்களா?












Click it and Unblock the Notifications