வலிமை படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் சைத்ரா ரெட்டி செய்த காரியத்தை பாருங்க!
சென்னை: வலிமை திரைப்பட ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர் அஜித்குமாருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சைத்ரா ரெட்டி.
ஆந்திராவை சேர்ந்தவர் சைத்ரா ரெட்டி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நடித்துவருகிறார். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.
அப்பா இல்லாத குடும்பம். குடிக்கார அண்ணன், போலீஸ் வேலைக்கு முயற்சிக்கும் தம்பி, பொறுப்பில்லாத தங்கைகள், பழி வாங்கத் துடிக்கும் பெரியப்பா குடும்பம்- இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றும் பெண்ணாக நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

கயல் சீரியல்
தனது தங்கை விரும்பியவருடன் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுகிறார் சைத்ரா ரெட்டி. தனது தம்பி, இன்னொரு தங்கை ஆகியோரை கரை சேர்த்துவிட்ட பிறகுதான் தனக்கான வாழ்க்கையை குறித்து யோசிப்பேன் என்ற எண்ணத்தில் இருக்கிறார் சைத்ரா ரெட்டி. பல்வேறு திருப்பங்களுடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக உள்ளது.

வலிமை படத்தில் சைத்ரா
இந்த நிலையில் சைத்ரா ரெட்டி அஜித் நடித்த வலிமை படத்திலும் நடித்துள்ளார். அஜித்திற்கு கீழ் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக வருவார். கஞ்சா விற்பனை செய்யும் நெட்வொர்க்கை டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்துக் கொடுத்தல், அவர்கள் பேசிக் கொள்ளும் போன் அழைப்புகளை ஒட்டு கேட்டல் உள்ளிட்டவைகளை செய்யும் போலீஸாக சைத்ரா நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்
எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சைத்ரா ரெட்டி, இன்றைய தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படமாகும். அந்த போஸ்ட்டில் சைத்ரா கூறுகையில், இந்த புகைப்படத்தை நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தேன்.

பிடித்த நடிகர் அஜித்
எனக்கு பிடித்தமான நபர் அஜித். வலிமை படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த படம். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியை தருகிறது. இந்த போட்டோ அஜித் சாரின் மேக் அப் கலைஞரின் போனில் எடுக்கப்பட்டது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு அந்த புகைப்படம் எனக்கு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வலிமை படம் சில காரணங்களால் வெளியாக தாமதமானது.

யூடியூப் சேனல்
அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியில், அந்த புகைப்படத்தை நான் மிஸ் செய்துவிட்டேன் என கூறியிருந்தேன். இதை கேட்ட எனது சிகை அலங்கார கலைஞர், அஜித் சாரின் மேக் அப் கலைஞரிடம் பேசி தேடி கண்டுபிடித்து அந்த படத்தை எனக்கு அனுப்பியுள்ளார். பார்ப்பதற்கே மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. எனது சந்தோஷத்தை உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன். அதனால் இந்த போட்டோவை இன்ஸ்டாவில் போட்டுள்ளேன். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு அஜித் அண்ணாவுக்கு நன்றி என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications