CWCயில் 4 சீசன்கள் வெற்றிக்கு காரணம் இதுதான்! அந்த பிரபலம் வாழ்க்கையில் நடந்த மாற்றம்- வெங்கடேஷ் பட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றி அடைவதற்கு என்ன காரணம் என்பது பற்றி முதன்முறையாக செஃப் வெங்கடேஷ் பட் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதாவது விஜய் டிவியில் பல வருடங்களாக பணியாற்றி வரும் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது பற்றி வெளிப்படையாக சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

அதில் வெங்கடேஷ் பட் பேசுகையில், முதல் சீசன் தொடங்கப்படும் போது எங்கள் எல்லோருக்குமே ஒரு பதட்டம் இருந்தது. நான் அதுவரைக்கும் சிடுசிடுவென்று இருப்பேன். எனக்கு ஒரு டிஷ் அடுத்தவர் சமைத்தது பிடிக்கவில்லை என்றால் உடனே அதை ஓரமாக வைத்து விடுங்கள் என்று கராராக சொல்லிவிடுவேன். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படி சொல்ல முடியாது. எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.
அதற்கு சரி என்று நானும் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஆனால் அந்த முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் எல்லாருமே சீனியர் நடிகர்கள். எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அடுத்த சீசனில் பயங்கர ஜாலியாக மாறிவிட்டேன். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றி அடைவதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொடங்கிய மீடியா மேஷன் நிறுவனத்தார் தான்.
அந்த நிறுவனத்தில் இருந்த தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோருமே போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு முழு ஃப்ரீடம் கொடுத்தார்கள். நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் இதை தான் பேச வேண்டும் இதை பேசக்கூடாது என்று எந்த இடத்திலும் யாருக்கும் தடை சொல்லவில்லை. அதனால் அந்த நிகழ்ச்சி வெற்றியடைந்தது.
அதுபோல இரண்டாவது சீசனில் புகழ் கோமாளியாக கலந்து கொண்ட போது அவருக்கு ஜோடியாக ஒரு எபிசோடில் சகிலா மேடம் இருந்தாங்க. அப்போ நான் புகழிடம் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது நான் உனக்கு போன் போட்டு இந்த நிகழ்ச்சிக்கு வா என்று சொன்னால் எனக்கு ரெண்டு நாள் ஃபுல் ஷெட்யூல் இருக்கிறது. அதற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்று நீ சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலைக்கு நீ வரவேண்டும் என்று சொன்னேன்.
அதற்குப் பிறகு மூன்றாவது சீசனில் புகழால் வரவே முடியாமல் போய்விட்டது. அவன் அந்த நேரத்தில் 17 படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். அது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. அதற்கு பிறகு புகழ் பல வளர்ச்சி அடைந்திருக்கிறான். இதற்கு காரணமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் தான். இது புகழுக்கு மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு இதுபோல மாற்றம் கிடைத்திருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications