கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நயன்தாரா? உழைப்பால் உயர்ந்த லேடி சூப்பர் ஸ்டார்.. ஆமா, இதென்ன புது முடிவு?
சென்னை: தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. இப்போது திடீரென இவரை பற்றி 2 தகவல்கள் இணையதளத்தில் கசிந்து கொண்டிருக்கின்றன.. இதைக்கேள்விப்பட்ட நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவே இருக்கும் நயன்தாரா, சமீபகாலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும், தன்னுடைய ஆவணப்படம் தொடர்பான நடிகர் தனுஷ் குறித்து கொடுத்த அறிக்கை வெளியானதில் இருந்தே அடிக்கடி பேசப்பட்டு வருகிறார்..

தொடர் விமர்சனங்கள்: தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால், பலரும் தனுஷூக்கு ஆதரவாகவே தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.. இதற்குபிறகு, 3 பத்திரிக்கையாளர்ளை குரங்கு என்று நயன்தாரா சமீபத்தில் கூறியிருந்ததும், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற பரபரப்புகள் ஒருபுறமிருக்க, நயன்தாரா டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், ராக்காயி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடித்து வருகிறார். பெரும்பாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது புதிய முடிவை திடீரென எடுத்துள்ளாராம்.
தனி பாடல்: அதாவது, மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் "தி ராஜா சாப்" என்ற படத்தில், பிரபாஸுடன் மாளவிகா மோகனன், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில்தான், ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..
இதற்கு முன்புகூட, சிவாஜி, சிவகாசி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்றாலும், ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களையே சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியிருக்கும்போது, திடீரென ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை.
திடீர் முடிவு: கடந்த வருடம் புஷ்பா 1 படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியது இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. அதேபோல, ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடியதும், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா நடனமும், ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிட்டன. இந்த வரிசையில் நயன்தாராவும், ஒரு பாடலுக்கு நடனமாட முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள். இது நயன்தாராவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துவருகிறது.
இதற்குநடுவில், நயன்தாரா செய்துவரும் பிசினஸ்கள் குறித்தும் சோஷியல் மீடியாவில் பல்வேறு தகவல்கள் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.. அதாவது, அன்றைய தினம், கேரளாவில் டிவி தொகுப்பாளராக இருந்த நயன்தாராவுக்கு, முதல்முதலாக சென்னையில் "ஐயா" படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைப்பு வந்ததாம்.. அப்போது, கேரளாவிலிருந்து ஆம்னி பஸ்ஸில், கோயம்பேடு வந்திறங்கிய நயன்தாரா, ஆட்டோவில் ஏறிதான் ஆடிஷன் நடக்கும் இடத்துக்கு சென்றாராம்.
உழைப்பு: அப்படிப்பட்ட நயன்தாரா, இன்று தமிழகத்திலுள்ள பெண் தொழிலதிபர்கள் லிஸ்ட்டில், 4வது இடத்தில் உள்ளாராம்.. பெட்ரோல் பங்க், அழகு பொருட்கள் தயாரிப்பு, 9 ஸ்கின் நிறுவனம், லிப் பாம், பெமி9 என்கிற நாப்கின் தயாரிப்பு, டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரர், விளம்பரங்கள் என பிஸியாக இருக்கிறாராம். இத்தனை உயரத்தை நயன்தாரா இன்று தொட்டுள்ளதற்கு காரணமே அவரது உழைப்புதான் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் பாராட்டி தள்ளிக் கொண்டிருக்கிறார்களாம்.
4 நாட்களுக்கு முன்பு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதைக்கேட்டு அதிர்ந்து போன அமைச்சர் அரசு ஓட்டலை விற்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் பரபரத்தன.
கோயம்பேடு: அப்போது, பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, "ஐயா படத்தின் ஆடிஷனுக்காக கேரளாவிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆம்னி பஸ்ஸில் வந்திறங்கிய நயன்தாராவுக்கு இன்றைக்கு தனிவிமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சுகபோக வாழ்க்கை" என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications