நாலு வருஷமா வாடகை கட்டல நடிகர் செந்திலின் உருக்கமான பேட்டி.. சிரிப்புக்கு பின்னாடி இத்தனை வலியா?
சென்னை: காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக தன்னுடைய நிலைமை மற்றும் குடும்பம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் சந்தோஷமாக பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் செந்திலின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி பேசி இருக்கிறார்.

அத்தோடு தான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றி போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என ஏறி இறங்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் செந்தில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேலே நடித்து தன்னுடைய காமெடி திறமையின் காரணமாக பல ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். இவர் ஒரு கோவில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு அதிகமான திரைப்படங்களில் நடித்து இப்போது சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
நடிகர் செந்திலின் பல டயலாக்குகள் இப்போது அதிகமாக ரீல்ஸ்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் உடைய காம்பினேஷன் அளவிற்கு அதற்குப் பிறகு எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிகப்படியான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தான் எல்லா திரைப்படங்களிலும் அடிவாங்கி, மிதி வாங்கிக் கொண்டிருக்கிறோமே என்கிற தாழ்வு மனப்பான்மை செந்தில் இடம் கிடையாது. அதனால் தான் அவருடைய கேரக்டர் பலருக்கும் பிடித்திருக்கிறது.
அதுபோல நடிகர் செந்தில் விரைவில் தொடங்கப்பட இருக்கும் கரகாட்டக்காரன் 2 திரைப்படத்தில் நடிப்பேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய அல்டிமேட் காமெடி இப்போது வரைக்கும் பார்க்கும்போதெல்லாம் பலருக்கும் சிரிப்பு வந்துவிடும். அதுவும் "அந்த இன்னொன்னு தானே இது" என்று இவர் பேசும் எக்ஸ்பிரஷன் பலருடைய மனக் கவலையை தீர்த்துவிடும்.
இந்த நிலையில் இவர் மீண்டும் நடிக்க இருப்பதால் விரைவில் கரகாட்டக்காரன் 2 தொடங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் செந்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் பலபேரை சிரிக்க வைத்திருக்கிறேன் ஆனால் என்னுடைய வாழ்க்கையிலும் பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது.
நான் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி அதை எனக்கு தெரிந்த நடிகர் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருந்தேன். அவர் அதை இன்னொருவருக்கு மேல் வாடகைக்கு கொடுத்திருக்கிறார். நான்கு வருடமாக அவர் வாடகை தரவில்லை. தண்ணி பில்லு, கரண்டு பில்லு எல்லாவற்றையும் நான்தான் கட்டிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இடத்தில் வேற யாராவது இருந்து இருந்தால் ரொம்பவே டென்ஷன் ஆகி இருப்பாங்க.
ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் தான் இருக்கிறேன். முறைப்படி கோர்ட்டு மூலமாக போய், இப்போதுதான் அதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் வாடகை பணம் எனக்கு கிடைக்கவில்லை என்று அந்த பேட்டியில் நடிகர் செந்தில் பேசியிருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications