இது யாருன்னு தெரியுதா? குக் வித் கோமாளி பிரபலம் தான்.. கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் ஒருவருடைய புகைப்படம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது யாரென்றால் செஃப் தாமுதான். ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்தால் யாரும் செஃப் தாமு என்று சொல்ல மாட்டார்கள். அவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கிறார்.
இதுகுறித்து செஃப் தாமு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் நிலையில் இது அதிகமாக லைக் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பலர் இந்த புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும் போது ஏற்கனவே பழைய ரஜினி, கமல் படங்களில் வில்லனாகவும்,போலீஸ் கேரக்டரில் நடிப்பவர் போலவே இருக்கிறாரே என்று வியப்போடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குழந்தையாக பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் எந்த அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோமோ அதுபோலவே நம்முடைய உருவமும் முன்னேறி மாறிக்கொண்டே இருக்கிறது. நமக்கே சில வருடங்களுக்கு முன்பு உள்ள புகைப்படங்கள் பார்க்கும்போது இது நாம் தான் இப்படி இருந்திருக்கிறோமா? என்று நினைவு வரும்.
அதோடு நம்முடைய பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் என்று எல்லோருடைய புகைப்படங்களையும் பார்க்கும்போதெல்லாம் இவங்க இப்படி இருந்திருக்காங்களே என்ற ஒரு கேள்வி எல்லோருக்கும் மனதிற்குள் டக் என்று உதித்து விடும். அதுவும் சில பிரபலங்கள் நாம பார்த்து பழகிய முகம் ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்கள் நாம் பார்க்காத அவர்களின் இன்னொரு முகமோ அல்லது கடந்த காலமோ நமக்கு தெரியும் இப்போது இது இவர்களா? என்ற வியப்பு நம்முள் ஆட்டோமேட்டிக்காக வந்து விடும்.
அந்த மாதிரி தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த ஒரு புகைப்படம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும், யூடியூபராகவும் செஃப்பாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் தாமுவின் புகைப்படம் தான். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்திருக்கிறார்.
ஐந்தாவது சீசனிலும் இவர்தான் நடுவராக இருக்கிறார் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் செஃப் தாமு, தன்னுடைய திருமணத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தை வெளியிட இது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அவருடைய மீசை மற்றும் தலைமுடி கருகருவென பலரையும் வாவ்... சொல்ல வைத்திருக்கிறது.
செஃப் தாமு பல வருடங்களாக செஃப்பாக பிரபலமாக இருந்தாலும் அவருக்கு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் புகழ் கிடைத்திருக்கிறது. அதில் அவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் இவர் இப்படித்தான் என்று தங்கள் மனதில் ஒரு பிம்பத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இவருடைய சில வருடத்திற்கு முந்தைய உருவத்தை பார்க்கும் போது அவரா இவர் என்று வியந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் தாமு புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவர் தாமுவாக இருக்க வாய்ப்பே இல்லை. இவரை நாங்கள் பழைய படத்தில் எல்லாம் போலீசாகவும் வில்லனாகவும் பார்த்து இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள். குக் வித் கோமாளி நெகிழ்ச்சியில் தாமு கலகலப்பாக கோமாளிகள் மற்றும் குக்குகளை கலாய்த்து கொண்டு ஒரு குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் இவர் கோமாளிகளை அடிக்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தாமு இந்த சீசனிலும் தொடர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீசனில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. அதனாலேயே என்னவோ விஜய் டிவி தரப்பில் இருந்து முதலாவதாக நடுவர்களை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதில் இந்த சீசனில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் இணைந்து இருக்கிறார்கள். இவர்களுடைய கூட்டணியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications