குழந்தையின் சாபம்! நீதிமன்றத்தில் நடந்தது இதுதான்! மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் ஜாய் கிரிஸில்டா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சமையல் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களின் மனதில் முதலில் வருவது குக் வித் கோமாளிதான். அந்த நிகழ்ச்சியின் நட்சத்திர நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார், திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ஜாய் கிரிஸில்டாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கண்ணீருடன் அவர் கொடுத்த பேட்டி, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mathampatti Rangaraj Cook With Comali

குக் வித் கோமாளி நடுவர்

மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதைத் தாண்டி, தனது இனிமையான பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற அவருக்கு எதிராக, ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார், பலருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. "என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" என்று அவர் புகார் அளித்தபோது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக ரசிகர்களின் வட்டாரத்திலிருந்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜாய் கிரிஸில்டா, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன், காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

6 மணி நேர உண்மை விசாரணை

கடந்த இருபது நாட்களுக்கு முன்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று காலை ஆஜரான ஜாய் கிரிஸில்டாவிடம், ஆறு மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இரண்டு வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நடைபெற்ற உறவு மற்றும் வாழ்க்கை குறித்து, அவர் மிக விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறினார். அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் முழுமையாகப் பதிலளித்துள்ளார்.

"சில சமூக வலைத்தளங்களில், கல்யாணம் செய்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்று செய்திகள் பரவுகிறது. ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வார்த்தைகள், இந்த விவகாரத்தின் மீது இருந்த குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

ஒரு பெண்ணின் தனிமை போராட்டம்

சமூக வலைத்தளங்களில், ஜாய்க்கு எதிராகப் பரவி வந்த அவதூறுகளால் அவர் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். "யூடியூபில் பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு பெண் வந்து நின்னுட்டா என்ன வேணும்னாலும் பேசலாம்னு அர்த்தமில்லை. அவர்களுக்கும் மனம் இருக்கிறது. நிறைய பிரச்சினைகளுடன் பல பெண்கள் மறைந்திருக்கிறார்கள், வெளியே வராமல் இருக்கிறார்கள். நீங்கள் தப்பாக எழுதுவதால் மட்டுமே அவர்கள் வெளியே வர முடியாமல் முடங்கி இருக்கிறார்கள்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், "என் குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது" என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். ஒரு பக்கம், இவ்வளவு பெரிய நடிகர் கூட இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா செய்திருப்பாரா? என்று ஒரு சில பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இன்னொரு பக்கம், "ஒரு பெண் இவ்வளவு தைரியமாக வெளியே வந்து பேசினால், அது நிச்சயம் உண்மையாக இருக்கும்" என்று ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

தளராத நம்பிக்கை

ஆறு மணி நேரம் நடைபெற்ற விசாரணை தனக்குத் திருப்தியாக இருந்ததாகவும், போலீசார் நடத்தும் விசாரணை மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார். மேலும், "புகார் அளித்த பின்பும் அவர் ஜாலியாக வெளியே சுத்திக் கொண்டுள்ளார். நிச்சயம் நான் போராடுவேன். என் குழந்தையின் தந்தை அவர்தான்" என்று உறுதியுடன் கூறினார்.

"இப்போதைக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்படி என்னை அழைக்கவில்லை, ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களை அழைத்து விசாரிப்பதாகக் கூறியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார். நடந்த விசாரணை முழுவதும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+