குக் வித் கோமாளியிலிருந்து விலக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜன்? பின்னணியில் நடந்த சம்பவம்!
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியின் 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆனால், இந்த வார எபிசோடில் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜன் இடம்பெறாதது, ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக ஐந்து சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான ரவுண்டு ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி இதற்கு முந்தைய சீசன்களில் கலக்கிய போட்டியாளர்களுக்கும் இந்த சீசனில் உள்ள டாப் 5 போட்டியாளர்களுக்கும் இடையே போட்டி நடைபெற்று இருக்கிறது. இதற்காக இதற்கு முந்தைய சீசன்களில் இருந்து உமா ரியாஸ்கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகிய ஐந்து பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் போட்டி போட்டு சமைக்கும் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புரோமோவில் மற்றுமொரு விஷயம் இருக்கிறது
யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜன்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜன், பாரம்பரிய சமையல் முறைகள் மூலம் பிரபலமானவர். யூடியூபில் தனது சமையல் வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற இவர் மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகச் சேர்ந்த பிறகு, அவர் இன்னும் பிரபலமானார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சமீபத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஜாய் அளித்த புகார்
சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி ஜாய் கிறிசில்டா, அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்தார். மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றியதாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை கலைக்க சொல்லி அடித்ததில் தனது காது கேட்காமல் போனதாகவும் ஜாய் குற்றம் சாட்டினார். இந்த அதிர்ச்சி அளிக்கும் புகாருக்குப் பிறகுதான், சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதேபோல, நாஞ்சில் விஜயன் போன்ற விஜய் டிவி பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இது ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது.
குக் வித் கோமாளியில் இருந்து நீக்கம்
ஜாய் கிறிசில்டாவின் புகாருக்குப் பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரப் புதிய புரோமோ வெளியானது. அதில், மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர் குழுவில் இல்லை. இதுதான் பல சந்தேகங்களுக்குக் காரணமாகியுள்ளது. சிலர், ஜாய் கிறிசில்டாவின் புகாரின் காரணமாக, மாதம்பட்டி ரங்கராஜன் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். வேறு சிலரோ, இந்த விவகாரம் காரணமாக, மாதம்பட்டி ரங்கராஜனே நிகழ்ச்சியில் இருந்து தாமாக விலகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக மூன்று நடுவர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் இரண்டு நடுவர்கள் மட்டுமே இருப்பது, இந்தச் செய்திகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. மாதம்பட்டி ரங்கராஜன் விலக்கப்பட்டாரா? அல்லது அவரே விலகினாரா? என்பது குறித்து, விஜய் டிவி எந்தவித அதிகாரபூர்வமான விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications