CWCயில் சுனிதாவுக்கு உமைரை திருமணம் பேசி முடித்த புகழ்! தட்டை மாற்றும் நேரம் குறுக்கே புகுந்த குரேஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளியில் family roundல் வந்த உமைர் லத்தீப்பின் தாயிடம், சுனிதாவுக்காக, கோமாளி புகழ் பெண் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உமைரின் அம்மா, ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார்.

குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 250 எபிசோடுகளை தாண்டி தற்போது 6ஆவது சீசன் நடந்து வருகிறது. இதில் 10 குக்குகளும் 10 கோமாளிகளும் கலந்து கொண்டனர்.

television cook with comali

இவர்களில் சவுந்தர்யாவும், கஞ்சா கருப்பும் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள 8 பேருக்கிடையே போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி சமையல் என்பதை தாண்டி ஃபன்னுக்கு கேரண்டி என சொல்லலாம்.

கோமாளி

இந்த நிகழ்ச்சிகளில் கோமாளிகளாக வரும் புகழ், குரேஷி, சுனிதா, தங்கதுரை, ராமர் உள்ளிட்டோர் காமெடியில் கலக்குகிறார்கள். நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த, ஆரம்பத்தில் ரம்யா பாண்டியனுக்கும் புகழுக்கும் ஏதோ இருப்பது போல் காமெடி செய்தனர்.

பேரிங்

அது போல் அஸ்வின்- சிவாங்கி, பவித்ரா லட்சுமி- புகழ், சுனிதா- அஸ்வின் என காமெடியாக போனது. தற்போது சீசன் 6 நிகழ்ச்சியில் சுனிதா அடிக்கடி உமைருடன் பேரிங் ஆவதால் அவர்களை போட்டியாளர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

யார் இந்த உமைர்

உமைர் லத்தீப், காஷ்மீரை சேர்ந்தவர். இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் முதல் காஷ்மீரியும் இவர்தான். அமரன் படத்தில் உமைர் நடித்திருந்தார். இந்த படத்தில் வஹீத் அகமதுவாக நடித்திருந்தார். இவருக்கு 25 வயதாகிறது. இவர் மாடலாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

television cook with comali

சமையலில் கில்லாடி

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் சமையல் செய்வதிலும் கில்லாடி என்பது இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் தெரிகிறது. இந்த வாரம் குக் வித் கோமாளியில் family round என்பதால் உமைரின் தாய் வந்திருந்தார்.

காஷ்மீரி பெண்

அப்போது அவரிடம் குரேஷி, அம்மா, "உமைருக்கு எப்போது கல்யாணம்" என கேட்டார். அதற்கு அவருடைய தாய், "இன்னும் கொஞ்ச நாள் ஆகும்" என்றார். அதற்கு குரேஷி, "பொண்ணு எந்த ஊரும்மா" என கேட்டதற்கு, "காஷ்மீரி பொண்ணுதான்" என்றார். "வேறு பெண்களை திருமணம் செய்வதாக இல்லையாம்மா" என கேட்டார். அதற்கு உமைரின் அம்மாவும் "இல்லை" என்றார்.

சுனிதாவுக்கு சவால்

இந்த நிலையில் பிரியா ராமன், சுனிதாவை அழைத்து, உமைர், அவருடைய அம்மா கண்முன்னாடி, ஐ லைக் சுனிதா என சொல்ல வைக்க வேண்டும் என சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற சுனிதா, உமைரின் டேபிளுக்கு சென்று, அவரது அம்மாவை "ஆன்ட்டி" என அழைத்தார். அதற்கு புகழ், அழகா அத்தைனு கூப்பிடாம, ஆன்டின்னு ஏன் கூப்பிடுறே" என்றார். இந்த பொண்ணு ஓகேவா என புகழ் கேட்க , ஒன்றும் புரியாத அம்மா, ம்ம் ஓகே என சொல்ல, புகழோ, உமைரின் அம்மா சுனிதாவுக்கு ஓகே சொல்லிட்டாங்க என துள்ளி குதித்தார்.

television cook with comali

தேங்காய் மாற்றும் நேரம்

அப்போது நடுவே புகுந்த குரேஷி, அம்மா என்னிடம் காஷ்மீரி பொண்ணுதான் என்றீர்களே என கேட்டார். அதற்கு அந்த அம்மாவும் ஆம் காஷ்மீரிதான் என்றார். உடனே நிலையை உணர்ந்த புகழ், லட்சுமி ராமகிருஷ்ணன் கூடையில் வைத்திருந்த தேங்காயை எடுத்துக் கொண்டு உமைரின் அம்மாவிடம் தட்டை மாற்றுவது போல் கொடுத்தார்.

காமெடி

அங்கு தேங்காய் காணாமல் தேடிய லட்சுமி ராமகிருஷ்ணன், புகழை ஒரு தட்டுதட்டி, கொடுடா தேங்காயை என வாங்கிக் கொண்டு போய்விட்டார். அப்போது அங்கு ஒரே கலாட்டாவாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+