CWCஇல் விசித்ரா சொன்ன வார்த்தை கதறி அழுத ஸ்ருஷ்டி.. நடுவர் கூட இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது.
இதில் விசித்திரா சொன்ன வார்த்தையை கேட்டு ஸ்ருஷ்டி கதறி அழுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. இதில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஸ்ருஷ்டி தனக்கு கொடுத்த உணவை மாற்றி கொடுத்ததால் அழுகிறார். இதுபோல எனக்கு மூன்று முறை ஆகிவிட்டது நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை இரண்டு நாட்களாக நடைபெறும் சனிக்கிழமை எபிசோட்டில் அட்வான்டேஜ் டாஸ்கள் வைக்கப்படும். இதில் அட்வான்டேஜ் வெல்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோட்டில் இரண்டு அட்வான்டேஜ்கள் வழங்கப்படும். முதல் அட்வான்டேஜ் ஏதாவது ஒரு பத்து நிமிடம் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகள் இல்லாமல் சமைக்கலாம்.
மூணு வருஷம் இப்படி முடியும்னு எதிர்பார்க்கல..பல பேர் இப்போ கூட இல்லை..கண் கலங்கிய நடிகர் சித்து
மற்றொரு அட்வான்டேஜ் தனக்கு வந்த உணவு பிடிக்கவில்லை என்றால் அதை வேறு ஒருவரிடம் மாற்றிக் கொள்ளலாம் என்ற இரண்டு சலுகைகள் அட்வான்டேஜ் வென்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்படுவது எப்போதும் வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் இந்த சீசனில் இந்த அட்வான்டேஜால் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த வாரத்தில் கூட குரேஷி அட்வான்டேஜ் வென்ற பிறகு மாற்றிக் கொடுத்தார். அதை சிவாங்கி சரிவர சமைக்க முடியாமல் திணறி இருந்தார். பாகற்காய் வைத்து இனிப்பு செய்ய வேண்டும் என்று கூறியதால் சிவாங்கி முடியாது என்று போராடி பிறகு செய்து முடித்தார். ஆனால் மீண்டும் அவருக்கு கடந்த வாரத்திலும் பாகற்காய் வந்ததால் ஒருவருக்கு அட்வான்டேஜை திருப்பி மாற்றிக் கொடுப்பதால் தான் இந்த மாதிரி பிரச்சனைகள் வருகிறது என்று பல கருத்துக்கள் குவிந்து வந்தது.
அது மட்டுமல்லாமல் இந்த வாரமும் அசைவ உணவுகளை சமைக்க வேண்டும் என வைக்கப்பட்டிருக்கிறது. அதில் விசித்திரா தனக்கு மட்டன் வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பதாக செஃப்பிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் விசித்திரா அட்வான்டேஜ் ஜெயித்திருந்ததால் வேறு ஒருவரிடம் இருக்கும் மட்டனை விசித்திராவிற்கு வழங்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் விசித்திரா தனக்கு கிடைத்த அட்வான்டேஜை பயன்படுத்தி ஸ்ருஷ்டியிடம் இருந்து வாங்கிக் கொள்வதாக கூறுகிறார். இதனால் கடுப்பான ஸ்ருஷ்டி கோபத்தில் கண்கலங்கி, இது மூன்றாவது முறையாக அது எனக்கு இப்படி நடக்கிறது என்று கூறி அவர் அழுகிறார். ஏற்கனவே சிவாங்கிக்கு பாகற்காய் வந்த போது நான் போட்டிக்கு வரவில்லை என்று சொல்லி கடந்த வாரம் நடுவர்களை கோபப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இந்த வாரம் ஸ்ருஷ்டியும் தனக்கு அட்வான்டேஜ் பயன்படுத்தி உணவை மாற்ற வேண்டாம் என்று அழுகிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications