CWC டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இவ்வளவா? அடேங்கப்பா..! மொத்தமா அள்ளியது இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடு அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்றும் அவருக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கிறது என்பது பற்றியும் சில தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் தொடர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் முதல் சீசனை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீசனும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த சீசனிலும் முதல் சீசனில் இருந்து தொடர்ச்சியாக கோமாளிகளாக இருந்த புகழ், குரோஸி, சுனிதா போன்றோரோடு ஜிபி முத்து, மோனிஷா முதலிய சில புதிய கோமாளிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் ஐயப்பா, கல்யாண், விசித்திரா, ஆண்ட்ரியன், மைம் கோபி, விஜே விஷால், கிஷோர் மற்றும் சிவாங்கி என பத்து குக்குகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நான்காவது சீசன் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. இதில் விசித்ரா,ஸ்ருஷ்டி, சிவாங்கி, ஆண்ட்ரியன், கிரண் மற்றும் மைம் கோபி என இவர்கள் மட்டும் தான் பைனல் ரவுண்டுக்கு செலக்ட் ஆகி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த போட்டியில் மைம் கோபி தான் முதல் இடத்தை பெற்று டைட்டில் ஜெயித்திருக்கிறார் என்றும் அதுபோல இரண்டாவது இடத்தில் ஸ்ருஷ்டியும் மூன்றாவது இடத்தில் விசித்திராவும் வெற்றி பெற்று இருப்பதாகவும் சில தகவல்கள் வலம் வருகிறது.
அதே நேரத்தில் இந்த போட்டியில் முதலாவது இடத்தை பெற்றவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும், அதுபோல இரண்டாவது இடத்தை பெற்றவருக்கு 5 லட்சம் பரிசு தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உறுதியான தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகி விடும்.
அதே நேரத்தில் ஆரம்பத்திலிருந்து இந்த சீசனின் டைட்டில் வின்னராக சிவாங்கி தான் ஜெயிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர் ஜெயிக்கவில்லை என்பது சிவாங்கியின் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த முறை விஜய் டிவி உண்மையாக திறமையின் அடிப்படையில் பரிசு கொடுத்து விட்டது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications