முன்னாடிலாம் இப்படி இல்ல..ஆனால்? இப்போ மாறிடுச்சு..கணவர் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்ட தீபிகா
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரிஸில் ஒன்றாக நடித்து சில நாட்களுக்கு முன்பு தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு திருமணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ராஜா வெற்றி பிரபு பற்றி தீபிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தீபிகா பதிவிற்கு ராஜா வெற்றி பிரபு பதில் கொடுத்திருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் இல்ல. அந்த வகையில் இப்போது புது ஜோடியாக இடம் பிடித்தவர்கள் தான் கனா காணும் காலங்கள் சீரியல் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தது.
நாங்கள் ஒன்றாக நடித்திருந்தாலும் காதலிக்கவில்லை என்றும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் வீட்டில் திடீரென்று மாப்பிள்ளை பார்க்கும்போது இருவரும் பேசி பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறோம் என்றும் தீபிகா கூறி இருந்தார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று வந்து இந்த தம்பதி மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ராஜா வெற்றி பிரபு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சு. இப்போ காலை வேலையில் நடைபயிற்சி செய்ய போகும் போது கூட பச்சைக் கொடியால் சூழப்பட்ட அமைதியை தேடுகிறோம்.
இதற்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் 24 மணி நேரமும் ஒன்றாக செலவழித்தது இல்ல. ஆனா இப்போ அவரை தொடர்ந்து என்னுடைய பக்கத்திலேயே வைத்திருப்பது, என்னுடைய அறையை பகிர்ந்து கொள்வதும் கற்பனைக்கு எட்டாத விதத்தில் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அவர் என்னோடு இருப்பது பெரிய விஷயமாக தோன்றுகிறது. அதோடு அவர் என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் நான் அதை அனுபவித்து மகிழ்கிறேன்.
எனக்கு பிடித்த என்னுடைய நண்பர், (கணவர்) எனக்கு என்னுடைய ரூம்மெட் ஆவதை விட அழகானது எதுவாக இருக்க முடியும்? திருமணத்திற்கு பிறகு அவர் முன்னாடி நான் எளிமையா இருப்பதும், அவர் என்னுடைய பக்கத்திலே இருப்பதும் என்னை அதிர்ஷ்டசாலியா உணர வைக்கிறது. அவர் எனக்காக செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் எனக்கு தனி சிறப்பாகவும், மதிப்பாகவும் பீல் பண்ண வைக்கிறது.
எங்கள் உறவில் அவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் கடலை விட பெரியது என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கணமும் நான் அவரை காதலிப்பதை என்னால் தடுக்க முடியவில்லை. அதைவிட அழகானது என்னன்னா, அவர் எனக்காக செய்யும் செயல்கள் எல்லாம் அவருடைய இருந்து இயற்கையாகவே செய்கிறார். இதையெல்லாம் ஒருவருடைய வாழ்க்கையில் பெறுவது என்பது பெரிய விஷயம். அது எனக்கு கிடைச்சிருக்கு.
இன்னைக்கு என்னால நான் என்னுடைய வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் நிறைவையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று நம்பிக்கையோடு சொல்ல முடியும். அது மட்டும் இல்ல, தெறி திரைப்படத்தில் மித்ரா நான் முழுமையா இப்பதான் உணர்கிறேன்னு சொல்லும்போது கூட அந்த காட்சியை என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது என்று நினைத்தேன்.

ஆனால் இப்போ நான் அனுபவிக்கும் போது ஒருத்தங்க திருப்தி அடைவதற்கும், முழுமை அடைவதற்கும் பெரிய ஆடம்பரமான விஷயங்கள் தேவையில்லை என்பதை என்னால் உணர முடிஞ்சிருக்கு. அதுபோல நீங்க இப்போது வாழ்க்கையைப் பற்றி நிச்சயம் அற்றதாக நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனா ஒரு நாள் சுரங்க பாதையில் முடிவில் ஏற்படும் வெளிச்சம் போல அற்புதமான தருணங்களை அனுபவிப்பீர்கள் என்று தன்னுடைய கணவர் குறித்து தீபிகா மனதில் இருப்பதை கொட்டி இருக்கிறார்.
இதற்கு தீபிகாவின் கணவரான ராஜா வெற்றி பிரபு, எனக்கு இவ்வளவு அழகா எக்ஸ்பிரஷன் பண்ண தெரியாது. ஆனா இந்த தலைப்பு உண்மையில் என்னை ஆழமாக நீ காதலிக்கிறாய் என்பதை பிரதிபலிக்கிறது. என்னையும் அதே சிறந்த நண்பராக உணர வைத்ததற்கு நன்றி தீபிகா என்று கூறியிருக்கிறார்.
-
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
நடிகர் ஜனகராஜ்க்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து.. வாழ்க்கையே மாறி போச்சு.. நண்பர் பகிர்ந்த விஷயம் -
‘முதல்வரையும் கேள்வி கேட்டீங்களா?’... விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா வைத்த செக்! புது பஞ்சாயத்து -
இயக்குநர் சேரன் வீட்டில் ஏற்பட்ட துயரம்.. தாயின் இழப்பால் கண்ணீரில் குடும்பம்.. பிரபலங்கள் ஆறுதல் -
OTT: பக்ரீத் விடுமுறைக்கு செம என்டர்டெயின்மென்ட்... தியேட்டரா? OTT-யா? இந்த படங்களும் ரிலீஸ் ஆகிறது -
கருப்பு கதையின் பின்னால் ஹைகோர்ட் மகாராஜாவா?.. ஆர்.ஜே. பாலாஜி சொன்ன உண்மை.. இப்படியும் நடந்ததாம்!











Click it and Unblock the Notifications