ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்..இப்படி ஆகும்னு நினைக்கல..வருத்தத்தை பகிர்ந்த தீபிகா
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா,ராஜா வெற்றி பிரபு இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து இருவரும் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கின்றனர்.
அப்போது தீபிகா தனக்கு ஒரு நாள் முன்பு திருமணம் நடந்திருக்கலாம் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் வெற்றியைத் தொடர்ந்து இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வரும் நடிகை தீபிகா மற்றும் கௌதம் கேரக்டரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபு இருவருக்கும் சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கணவன் மனைவியாக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கும், தங்களுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கும் நன்றி கூறிக் கொண்டிருந்தனர்.
அப்போது திருமணத்திற்கு பிறகு தாங்கள் ஹனிமூன் வந்திருக்கும் விஷயத்தை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தனர். கூடவே நாங்கள் இப்போது இங்கே வந்திருக்கும் இதே இடத்தில் தான் நேற்று நடிகர் அஜித்குமார் இருந்திருக்கிறார். ஒரு நாளைக்கு முன்பு நாங்கள் இங்கே வந்திருந்தா அவரை பார்த்து இருக்கலாம். ஆனால் அவரை பார்க்க முடியாமல் ஆகிவிட்டது என்று வருத்தத்தை கூறி இருக்கிறார்.

எனக்கு நடிகர் அஜித்குமார் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவர் இங்கே வருவார் என்று தெரிந்திருந்தால் நாங்கள் ஒரு நாளைக்கு முன்னாடி கூட திருமணத்தை வைத்து இருக்கலாம். அப்பவாவது அவரை பார்த்திருக்கலாம். ஒரு நாள் பின்னாடி திருமணத்தை வைத்ததால் இப்போது அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது.
எங்களை இங்கே கூட்டிட்டு வந்தவர்கள் தான் அஜித்குமாரை இங்கிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அஜித்குமாரோடு அவர்கள் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். அந்த போட்டோவை பார்க்கும் போது எனக்கு அழுகையாக வருகிறது என்று உணர்வுபூர்வமாக தீபிகா லைவில் பேசிய வார்த்தைகளுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications