2017லிலும் அடங்காத கொலைவெறியோடு அலையும் காயத்ரி...எப்படா முடியும்?
காயத்ரி என்ற அழகாக பெயரை அடங்காத கொலைவெறியோடு இருக்கும் காயத்ரிக்கு வைத்து விட்டார்காளே என்று கொந்தளிக்கின்றனர் டிவி சீரியல் ரசிகர்கள்.
சென்னை: தெய்வமகள் சீரியல் சன் டிவியில் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. எப்படா முடிப்பீங்க என்று வாசகர்கள் தினசரி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் விடாமல் ஒளிபரப்பி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த் விலாஸ் முத்த மருமகள் காயத்ரிக்கும் அவரது கொழுந்தன் பிரகாஷ் இடையேயான மோதல்தான் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சொத்துக்களை அடைய வில்லத்தனம் செய்யும் காயத்ரி பல கொலைகளை செய்து போலீஸ் போல வலம் வருவதுதான் பலரது காதுகளில் பூ சுற்றும் செயல். ஆனாலும் அசராமல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

போலீஸ் அதிகாரி
காயத்ரி மாயமான வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி மந்த்ராவை கடத்தி அவரைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து நாடகமாடுகிறார் காயத்ரி. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

யாரையும் கொல்வேன்
தன்னை எதிர்க்கும் யாரையும் கொல்வேன் என்பது காயத்ரியின் வசனம். இது காடு... இங்க ஜெயிக்கிறவன்தான் வாழ முடியும். நான் ஜெயிக்க எல்லாரையும் கொல்வேன். அது தங்கையாக இருந்தாலும் என்று சொல்கிறார் காயத்ரி.

கொன்று புதைக்கும் காயத்ரி
மந்த்ராவை கடத்திய காயத்ரி, ஐஏஎஸ் அதிகாரியான அவரது கணவரை கொல்கிறார். மந்த்ராவின் தலையில் கல்லைப்போட்டு கொன்று அந்த பழியை பிரகாஷ் மீது போடுகிறார். மந்த்ரா உயிரிழக்கும் போது காயத்ரி என்று கத்திக்கொண்டே சாகிறார். இதை கேட்ட போலீஸ் யாரையும் எதற்காகவும் சந்தேகப்படவில்லை.

காயத்ரிக்கு உதவும் நபர்கள்
காயத்ரிக்கு உதவிய நம்பி, மத்திய அமைச்சர், எம்எல்ஏ என அனைவருக்குமே குழி தோண்டிய காயத்ரி தன்னைப்பற்றி உண்மை தெரிந்த லிங்கத்தையும் போட்டுத்தள்ள திட்டம் போடுகிறாள். லிங்கம் மனம் திருந்தியிருப்பதால் எப்படியும் தனக்கு ஆபத்துதான் என்பது காயத்ரியின் எண்ணம்.

தங்கையின் அசிங்க பேச்சு
கொலைவெறி காயத்ரியின் தங்கை வினோதினியின் நாசமா போறவளே வார்த்தை கேட்கவே நாராசமாக இருக்கிறது. மூதேவி... சின்ன தொடப்பக்கட்ட என்றெல்லாம் திட்டு வாங்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தினசரியும் திட்டு தொடர்கிறது.

எப்படா முடிப்பீங்க
கடந்த 4 ஆண்டுகளாகவே காயத்ரியின் வில்லத்தனங்களையும், காதில் பூ சுற்றும் கதையையும் பார்த்து வெறுத்து போயுள்ளனர். இந்த முட்டாள்தனமான சீரியலை சீக்கிரம் முடிங்கப்பா என்கின்றனர் வாசகர்கள். ஆனால் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்வதாக இல்லை. 2017 ஆம் ஆண்டிலாவது முடிப்பீங்களா என்று கேட்கின்றனர் வாசகர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications