பிறந்த நாளில் நடிகை தேவயானி செய்த செயல்.. சந்தோஷத்தில் துள்ளி குதித்த தம்பி நகுல்! அழகான அன்பு காட்சி
சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி என்பது பல ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். அதே ஜூன் 22 ல் தான் விஜய்யுடன் பல படங்களில் நடித்த நடிகை தேவயானியின் பிறந்த நாளும். அதை ஒவ்வொரு வருடமும் அவருடைய குடும்பத்தினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தன்னுடைய பிறந்த நாளில் தேவயானி தன் தம்பி நகுலுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை நகுல் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து அக்காவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை தேவயானிக்கு அறிமுகமே தேவையில்லை. 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இப்ப வரைக்கும் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தொட்டால் சிணுங்கி என்ற திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் இப்போதும் பார்ப்பவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது நம்ம தேவயானியா? என்று சொல்லும் வகையில் தான் அந்த போட்டோஸ் இருக்கிறது.

ஹோம்லி நடிகை
முதல் படம் தான் எதிர்பார்க்காத விதமாக அந்த கேரக்டர் எனக்கு அமைந்துவிட்டது அதனால் அந்த கேரக்டரில் நடித்துவிட்டேன். ஆனால் இனி என்னுடைய வாழ்க்கையில் கவர்ச்சியான கேரக்டரில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்த தேவயானி இரண்டாவது படத்தில் இருந்து இன்று வரைக்கும் நடித்த படங்களில் எந்த படங்களிலும் ஆபாசமான காட்சிகளில் நடிக்காமல் குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
காதல் திருமணம்
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போது சீரியலிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கோலங்கள் சீரியல் இப்போதும் இவரை அபியாக சின்னத்திரை ரசிகர்களை கொண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது. கோலங்கள் சீரியலுக்குப் பிறகு புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அந்த சீரியலின் மூலமாகவும் குடும்ப பெண்களின் மனதை கவர்ந்த தேவயானின் மகளும் இப்போது சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார்.
சீரியலில் அறிமுகம்
தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. தேவயானியின் அழகுக்கு ராஜகுமாரன் பொருத்தமா? என்பதுதான் அந்த நேரத்தில் பலருடைய கேள்வி. ஆனால் அடுத்தவர்களுக்காக நாங்கள் வாழவில்லை எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் தானே வாழ போகிறோம் என்று சொன்ன தேவயானி இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் சினிமாவில் பிசியான நடிகையாகவும் இருந்து வருகிறார்.
அக்கா தம்பி உறவு
தேவயானியின் தம்பியான நகுல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இருந்த நகுலை இப்போதும் யாராவது பார்த்தால் யாருக்கும் அடையாளம் தெரியாது அந்த அளவிற்கு உடல் எடை கூடி போய் இருந்தார். ஆனால் தன்னுடைய இரண்டாவது படமான காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் போது தன்னுடைய உருவத்தை மொத்தமாக மாற்றி இருந்தார். அவருக்கு அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.
தேவயானியின் பிறந்தநாள்
அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். பிறகு சில வருடங்களாக சினிமாவில் பிரேக் விட்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார். இப்போது மீண்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தேவயானியின் பிறந்தநாளை தன்னுடைய தம்பியோடு டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கிறார். தேவயானி நடித்த சூரிய வம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற நட்சத்திர ஜன்னலில் என்ற பாடலுக்கு தேவயானி மற்றும் நகுல் இருவரும் டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.
நகுல் பகிர்ந்த வீடியோ
அந்த வீடியோவை நகுல் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக எப்போதுமே அக்கா என்பவர் அம்மாவுக்கு சமம் என்று எல்லாரும் சொல்வார்கள். அது போல தான் நகுலும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். தேவயானிக்கு இரண்டு சகோதரர்கள். நகுலுக்கும் தேவயானிக்கும் தான் அதிகமான வயது வித்தியாசம். தேவயானி திருமணம் செய்து கொண்ட போது நகுல் தேவயானி உடன் சில வருடங்களாக பேசாமல் இருந்திருக்கிறார்கள். இப்போது அக்கா குடும்பத்துடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தேவயானி தன்னுடைய பிறந்த நாளில் குழந்தை போல தன்னுடைய தம்பியுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை பலரும் பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications