இப்படி எந்த நடிகையாவது பேசுவாங்களா? மேடையில் தேவயானி பேசிய வார்த்தை.. அதிர்ச்சியில் மீனா
சென்னை: நடிகை மீனா பற்றி தேவயானி மேடையில் பேசிய வார்த்தையை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். இது எல்லாம் உண்மையா என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
தான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கியமான காரணம் மீனா தான் என்றும் நான் மீனாவின் தீவிரமான ரசிகை என்றும் தேவயானி கூறி இருக்கிறார்.
மீனாவின் திறமைகள் மற்றும் நடிப்பு அழகு குறித்து தேவயானி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை மீனா குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமாகி பலதரப்பட்ட ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார். நடிகர் ரஜினிகாந்தை உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அவருக்கு ஜோடியாக நடித்து தற்போது அவருடைய குழந்தையும் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார்.
சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர். பலர் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுகின்றனர். அந்த வகையில் நடிகை மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவரைப் பற்றி தேவயானி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், நான் தமிழ் இண்டஸ்ட்ரியில் 1994 -95 இல் நுழையும் போது மீனாவை பார்த்துவிட்டு அவருடைய ரசிகையா தான் இங்கே வந்தேன். நான் உங்களுடைய ரொம்ப பெரிய ஃபேன் நான் உங்களுடைய அழகுக்கும், உங்களுடைய ஹார்ட் வொர்க், உங்களுடைய அழகான கண்ணு எல்லாத்துக்குமே நான் ஒரு ரசிகை.
எவ்வளவோ படங்கள், எவ்வளவோ பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீங்க அழகா கடந்து வந்திருக்கீங்க. அதுபோல மீனா இந்த அளவிற்கு வாழ்வதற்கு அவருடைய அம்மா தான் முக்கியமான அம்மா இல்லன்னா மீனா மட்டுமல்ல எந்த நடிகையாலும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாது. அம்மாவும், அப்பாவும் கண்டிப்பா ஒருத்தங்களுக்கு உறுதுணையா இருந்தால் தான் அவங்களால வெற்றி பெற முடியும்.

என்னுடைய அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு எவ்வளவோ சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்கிறதால தான் நாங்க இந்த இடத்துல வந்து நிற்கிறோம். அது மீனா மேடத்தின் அம்மாவாக இருந்தாலும் சரி, ராதிகா மேடத்தின் அம்மாவா இருந்தாலும் சரி எல்லாருடைய அம்மாவாக இருந்தாலும் அவங்க தான் எல்லாமே என்று கூறி இருக்கிறார்.
அதுபோல நடிகை மீனாவின் மகள் நைனிகாவையும் பற்றி தேவயானி மேடையில் பெருமையாக பாராட்டி இருக்கிறார். உன்னுடைய இன்டர்வியூ எல்லாம் நான் பார்த்தேன். நீ அதில் அவ்ளோ அழகா பேசி இருந்த. எல்லாருடைய மனசையும் நீ டச் பண்ணிட்ட என்று குழந்தைத்தனமாக தேவயானி மனதில் எந்த பொறாமையும் இல்லாமல் வெளிப்படையாக பாராட்டியது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications