நாளை வரும் தனலட்சுமி.. அதுவும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்..சேனல் கொடுத்த ஹின்ட்..இதை கவனிச்சிகளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமி நாளை லைவில் வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்த தனலட்சுமி முதல் முறையாக நாளை 2:30 மணிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லைவில் வர இருக்கிறாராம்.

ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டதன் அடிப்படையில் தற்போது நாளை வரும் தனலட்சுமி பல விஷயங்களைப் பற்றி பேச இருக்கிறாராம்.

24 மணி நேர ஒளிபரப்பு

24 மணி நேர ஒளிபரப்பு

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் புது முயற்சி ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் எல்லாம் விஜய் டிவியில் எபிசோடுகளில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் இந்த ஆறாவது சீசனில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்க்க வசதி இருக்கப்படுகிறது. இதனாலேயே இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் நன்றாக புரிந்து விடுகிறார்கள் .பல விஷயங்கள் 24 மணி நேரத்தில் நடைபெறுவது எபிசோட்டில் காட்டப்படுவதில்லை. இதன் அடிப்படையில் இதை 24 மணி நேரத்தை பார்க்கும் ரசிகர்கள் பொதுவாக யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றனர்.

வெற்றி தான் குறிக்கோள்

வெற்றி தான் குறிக்கோள்

அதே நேரத்தில் மக்கள் பிரதிநிதியாக இந்த ஆறாவது சீசனில் இரண்டு போட்டியாளர்கள் எடுக்கப்பட்டிருந்தனர். அதில் ஒரு போட்டியாளராக தனலட்சுமி இருக்க, தனலட்சுமி அரம்பம் ஆன முதலே தன்னுடைய தனித்துவமான விளையாட்டு விளையாடி வந்தாலும் அவர் ஜி பி முத்து, அசீம்,அசல் கோலார் என ஒரு சில போட்டியாளர்களுடன் அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக சண்டையிட்டு முட்டி மோதிக்கொண்டிருந்தார். டாஸ்க் என்று வந்துவிட்டால் இவர் அதில் வெறித்தனமாக விளையாடுவதும் டாஸ்க்காக பலமுறை விதிமீறல்களில் ஈடுபட்டு கமல் முன்னிலையில் திட்டுவாங்கி இருந்தாலும் தான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே இவர் குறிக்கோளாக வைத்து விளையாடி வந்தார்.

வழக்கமாக நடப்பது

வழக்கமாக நடப்பது

அதனாலையே தனலட்சுமி வெளியேற்றப்பட்டதுக்கு ரசிகர்கள் பலரும் இது நியாயம் இல்லாத வெளியேற்றம் என்று கருத்து கூறி வந்தனர். தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர் இந்த டாஸ்க்கில் இருந்தா நல்லா இருக்கும், அந்த டாஸ்க்கில் இருந்தா நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு டாஸ்க்கும் அவரை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தனலட்சுமி எந்த ஒரு தொடர்பு இல்லாமல் இருந்து வருகிறார். ஒவ்வொரு சீசன்களில் போட்டியாளர்கள் வெளியேறியதும் அவர்கள் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து தங்களுக்கு பிடித்தது பிடிக்காதது இனி செய்யப்போவது என அனைத்து விஷயங்களும் பகிர்ந்து வருவார்கள்.

நாளைக்கு வருகிறாராம்

நாளைக்கு வருகிறாராம்

அதுமட்டுமல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் பேஜில் லைவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதிலளித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் தனலட்சுமி இன்னும் லைவில் வரவில்லை. இதை பற்றி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக தனலட்சுமி லைவ் வர முடியவில்லை என்று ஹாட்ஸ்டார் கூறி இருந்தது. இந்த நிலையில் இந்த வார வெளியேறிய மணிகண்டன் இன்று லைவில் வந்து ரசிகர்களிடம் பேசிவிட்டார். இதை தொடர்ந்து நாளை 2:30 மணிக்கு தனலட்சுமி லைவில் வர இருப்பதாக ஹாட்ஸ்டார் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ நிறைய விஷயங்கள் பேச வேண்டியது இருக்கிறது என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+