இட்லி கடை கதை மாதம்பட்டி ரங்கராஜன் பர்சனல் ஸ்டோரியா? ஓபனா போட்டு உடைத்த தனுஷ்! பஞ்சாயத்து முடிந்தது
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில கலைஞர்களுக்கு மட்டும்தான் இத்தனை பெரிய பயணம் இருக்கும். ஆரம்பத்தில் தன் அண்ணன் செல்வராகவனின் துணையோடு வந்தவர், ஒரு கட்டத்துக்குப் பிறகு தனது தனித்துவமான உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே கோடம்பாக்கத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டார். அவர்தான் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட தனுஷ். ஆடுகளம், அசுரன் எனப் படத்துக்குப் படம் தனது நடிப்பில் ஒரு மாயத்தைக் காட்டி, இரண்டு முறை தேசிய விருதையும் வென்று, பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழிகளிலும் கால் பதித்துவிட்டார்.

தனுஷின் ஏற்றமும் சறுக்கலும்
எந்த ஒரு கலைஞனின் பயணமும் எப்போதும் வெற்றியால் மட்டுமே நிறைந்திருப்பதில்லை.தனுஷின் கதைக்கும் இது பொருந்தும். திருச்சிற்றம்பலம் என்ற ஒரு மாபெரும் வெற்றியை அவர் கொடுத்திருந்தாலும், அதற்குப் பிறகு வெளியான படங்கள் அவருக்குச் சோதனையான காலகட்டத்தைத்தான் கொடுத்தன. கேப்டன் மில்லர், ராயன், குபேரா போன்ற படங்கள் ரசிகர்களிடையே ஒரு பெரிய வரவேற்பைப் பெறத் தவறின. குறிப்பாக, தனது ஐம்பதாவது படமான ராயன், தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ரசிகர்கள் அந்தப் படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
நடிப்பில் மட்டுமல்ல, இயக்கத்திலும் தனுஷுக்குச் சில சறுக்கல்கள் இருந்தன. ராஜ்கிரணை வைத்து அவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அடுத்து அவர் தனது சகோதரி மகனை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தையும் அவர்தான் இயக்கினார் என்பதால், இந்தப் படத்தின் தோல்வி அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
வைரலான இட்லி கதை
இந்தச் சறுக்கல்களுக்கு மத்தியில், தனுஷ் இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு விஷயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. "சின்ன வயசுல இட்லி சாப்பிடக்கூட காசு இல்லாம கஷ்டப்பட்டேன். பூ பறிச்சு வித்து, அதில் கிடைக்கும் காசுல இட்லி வாங்கிச் சாப்பிட்டேன்" என்று அவர் சொன்னது, பலரையும் குழப்பியது. காரணம், அவர் பேசிய காலக்கட்டத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜா ஒரு பிரபலமான இயக்குநர். இதனால் பலர் பொய் சொல்கிறார் என்று தனுஷை கிண்டல் செய்து மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர்.
எல்லாம் கற்பனைதான்
இந்தச் சறுக்கல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், இட்லி கடை திரைப்படம் மூலம் ஒரு தரமான கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனுஷ் உறுதியாக இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், படத்தின் கதை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு சமையல் கலைஞரின் வாழ்க்கை வரலாறு என்று பல மீம்ஸ்களும், கேள்விகளும் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில்தான், இட்லி கடை விளம்பர நிகழ்ச்சியில் பரிதாபங்கள் கோபியும், சுதாகரும் தனுஷிடம் இதுகுறித்து நேரடியாகவே கேள்வி கேட்டனர். "இந்தத் திரைப்படம் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்தது என்கிறார்களே?" என்று கோபி கேட்டார். அதற்குப் பதிலளித்த தனுஷ், "அதெல்லாம் இல்லை. நான் எனது கிராமத்தில் என்னை பாதித்த சில கதாபாத்திரங்களை வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறேன். முழுக்க முழுக்க இது எனது சொந்த கற்பனைதான்" என்று பதிலளித்தார்.
தனுஷ் தனது வாழ்க்கையிலும், இயக்கிய படங்களிலும் சில சறுக்கல்களைச் சந்தித்திருக்கலாம். ஆனால், இட்லி கடை திரைப்படம் மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க அவர் தயாராகிவிட்டார். அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், நிச்சயம் ஒரு நல்ல கம்பேக்கைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
-
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications