ஓம் நமச்சிவாய.. அவங்க கண்ணுல பார்த்தேன்! நாளை மறக்க முடியாத நாள்.. திடீர் வீடியோ வெளியிட்ட தனுஷ்
சென்னை: நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் தனுஷ் இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட வீடியோ பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. தான் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஒரு சில நடிகர்கள் சினிமாவில் என்ட்ரி ஆகும்போது ஆரம்பத்தில் அதிகமான விமர்சனங்கள் பெற்றிருக்கிறார்கள். அதிலும் பிரபலங்கள் வீட்டு வாரிசுகள் என்றால் சொல்லவே வேண்டாம். இவர்கள் அவர்களுடைய திறமையை தாண்டி இவர்கள் அவரின் மகன் அதனால் இவருக்கு எளிமையாக வாய்ப்பு கிடைத்தது என்று பலராலும் சொல்லப்பட்டாலும் ஒரு சிலரால் மட்டும்தான் பெற்றோரை போலவே குழந்தைகளால் ஜெயிக்க முடிகிறது. அந்த வரிசையில் நடிகர் தனுஷும் ஒருவர்.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா பல திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் தனுஷ் சினிமாவில் ஆரம்பம் ஆகும் போது அதிகமான உருவகேளிகளை சந்தித்து இருந்தார். அதை எல்லாம் தாண்டி இப்போது முன்னணி நடிகராகவும், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை காட்டி ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கும் முன்பு தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் அதிகமான இளைஞர்கள் பட்டாலும் நடித்திருக்கிறார்கள். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷின் அக்கா மகன் நடித்திருக்கிறார். அவரோடு சேர்ந்து அனிகா சுந்தர் உட்பட பல இளம் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தனுஷ் இந்த பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ராயன் படத்திற்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் இயக்கி நடித்து இருக்கிறேன். இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை எடுக்கும்போது நாங்க எந்த அளவிற்கு என்ஜாய் பண்ணி சந்தோஷமா இருந்தோமோ இந்த படத்தை பார்க்கும் போது நீங்க அந்த அளவிற்கு என்ஜாய் பண்ணுவீங்க என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் நடித்து இருக்கிற இளைஞர்களும் அவர்களுடைய எதிர்காலத்தை பார்க்கிறதுக்காக காத்துக்கிட்டு இருக்கிறாங்க. அவங்களோட கனவுகள் எல்லாம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன். அவர்கள் சந்தோஷப்படுத்தும் இடத்தில் நான் இருந்திருக்கிறேன். அந்த ஃபீலிங் என்னன்னு எனக்கு தெரியும். எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
அதோடு இந்த பதிவுக்கு "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நாளை வெளியாகிறது ஓம் நமச்சிவாய" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவை பலர் பகிர்ந்து வருகிறார்கள். அதுபோல இசையமைப்பாளர் யுவன் உட்பட பலர் தனுஷ் மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications