தர்ஷா குப்தாவின் ஈர மனசு.. விழுந்து விழுந்து பாராட்டும் மக்கள்!
சென்னை: ஐயோ பாவம் என சொல்வது எல்லோருக்கும் எளிது ஆனால் அந்த என் கண்ணீரை துடைப்பது தான் பெரிய மனது.
Recommended Video
அதையும் தாண்டி அந்த கண்ணீருக்கு காரணமான பசியை கேட்காமலேயே குறைத்தால் அதைவிட சிறப்பு என தன்னால் முடிந்ததை நாள் தவறாமல் செய்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா விற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஆனால் தற்போது தன்னுடைய வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை இல்லாதவருக்கு பசிப்பிணியை ஆற்றி வருகிறார் .

மக்களுக்காக
தன்னால் முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்தாலே பேரானந்தம் என பலருக்கும் முன்னுதாரணமாக தெருவில் இறங்கி இருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கும் நேரத்தில் அடுத்த வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன யார் எப்படிப் போனாலும் நமக்கு நம்முடைய பாதுகாப்பு மட்டுமே போதும் என சிலர் இருக்கும் நிலையில் என்னால் முடிந்ததை செய்கிறேன் என துணிச்சலாக செய்கிறார்.

துணிச்சல்
வெளியே வந்து தினமும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் ஒரு சிறு உதவியாக தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ஒருவேளை உணவு வழங்கி வருகிறார் .அதனை பார்த்து பலரும் வாழ்த்தி வந்தாலும் ஒரு சிலர் எதற்கு இந்த விளம்பரம் என்று கலாய்த்து வருகின்றனர் .ஆனால் தன்னைப் பற்றி நெகட்டிவாக கமெண்ட் வரும் போடும் நெட்டிசன்களை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் கவனமாக தினமும் உதவிகளை செய்து வருகிறார் .

கலங்கிப் போகும் மனசு
ஆனால் உதவிகளை செய்யும் போது அப்படியே போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வருகிறார் .இதை பார்த்ததும் தான் கலாகிக்கின்றனர். என்னதான் இருந்தாலும் உதவி செய்கிறேன் என்றால் இப்படி விளம்பரம் இல்லாமல் செய்யலாமே எதற்காக இந்த விளம்பரம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் .ஆனால் அதற்கு இந்த மாதிரி ஒருவர் செய்யும் போது தான் அதனை பார்த்து பலரும் நாமும் இப்படி செய்யலாமே.

எவ்வளவு பெரிய மனசு
பலருக்கு செய்ய மனது வரும் அந்த ஒரே காரணத்திற்காக தான் இப்படி போஸ்ட் போட்டு இருக்கிறேன் என பதில் அளித்திருக்கிறார். இவர் அறிமுகமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் எனும் சீரியலில் தான் ஆனால் அந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் தான் அதிகமான வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது .அதுமட்டுமல்லாமல் இவர் சீரியல்களிலும் நடித்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை
அதனாலேயே இவருக்கு சீரியல்களையும் தாண்டி பெரும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கின்றனர். இவருக்குக் குக் வித் கோமாளி நிகழ்சசியில் மூலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதை கவர்ந்து விட்டார் .இந்த நிகழ்ச்சியில் புகழுடன் ஜாலியாக கலாய்த்துக் கொண்டு புகழுக்கும் பவித்ராவிற்கு இடையில் கொஞ்சம் சேட்டைகளை செய்து கொண்டு இருப்பதால் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.

சராசரி பெண்
இதுவரைக்கும் ஒரு நடிகையாக மட்டுமே நான் இருந்துள்ளேன் ஆனால் தற்போது தான் ஒரு சாதாரண சராசரி பெண்ணாக இருக்கிறேன். இந்த உதவியை செய்வதற்கு பெரிய மனது வேண்டும் என்றெல்லாம் இல்லை என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் உங்களால் முடிந்ததை நீங்களும் செய்யுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications