விஜய் பற்றி மோசமாக பேசிய சத்யராஜ்.. ஒரே வார்த்தையில் மகன் சிபி கொடுத்த பதிலடி! குடும்பத்துக்குள் குழப்பமா?
சென்னை: தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய் களம் இறங்கிய பிறகு, ஆதரவும் எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது அதிகம் பேசப்படுவது நடிகர் சத்யராஜ் குடும்பத்தின் செயல்படும் பலரையும் கவனிக்க வைத்து வருகிறது. சத்யராஜின் மகள் சமீப காலமாகவே விஜய் பற்றி கேள்வி மேல் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார். அதை தொடர்ந்து இப்போது சத்யராஜும் விஜய் பற்றி விமர்சித்து பேசி இருக்கிறார். அதற்கு அவருடைய மகன் சிபி சத்யராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சத்யராஜின் பேச்சு
சில வாரங்களுக்கு முன்பு "அமைதிப்படை" ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், சத்யராஜ் எமோஷனலான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். அமைதிப்படை படத்தை பார்த்து சிவாஜி கணேசன் கூட என்னை பாராட்டினாரு அதே போல ஒரு சமயத்தில் நான் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அப்போது நான் வளர்ந்து கொண்டிருந்த நடிகர் விஜய் ஒரு பேட்டியில் எனக்கு நடிப்பில் யாரும் இன்ஸ்பிரேஷன் இல்லை,
ஆனால் சில டயலாக்குகளை படிக்கும் போது இதை சத்யராஜ் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன் குறிப்பாக அமைதிப்படை படத்தில் அமாவாசை மாதிரி ஒரு கேரக்டரை நான் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு எனக்கும் வாய்ப்புகள் வர தொடங்கியது. இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது உடனே நான் அவருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன் என்று பேசி இருந்தார். அப்போது இந்த பேச்சு ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் இப்போது அதே சத்யராஜ் அரசியல் மேடையில் விஜயை கடுமையாக விமர்சித்து பேசுவது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
அதிலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சத்யராஜ் தலைவா பட பிரச்சனையின் போது விஜய் எப்படி வீடியோ வெளியிட்டார் என்பதை நடித்துக் காட்டி இருந்தார். மேலும் நான் குறைவாக சம்பளம் வாங்குபவன் என்னையே உங்களால் ஈசியாக சந்திக்க முடியாது, அப்படி இருக்கும்போது அவர் அதிகமா சம்பளம் வாங்குறவரு.. அவரை எப்படி நீங்க எளிமையாக சந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் சொல்வது போல சத்யராஜின் மகன் ஆன சிபி போட்ட ஒரு வரி பதிவு அதிகம் வைரலானது: "உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும்... கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என்று அவர் விஜயின் டயலாக்கை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு, அவர் யாருக்கு ஆதரவாக நிற்கிறார் என்பதை நேரடியாக சொல்லாமல் விஜய்க்கு சப்போர்டடாக சொன்ன பதிலாகவே பார்க்கப்படுகிறது.
திவ்யா தெளிவான பதில்
ஏற்கனவே விஜய் பற்றி சத்யராஜின் மகள் திவ்யாவும் பலமுறை விமர்சித்திருக்கிறார் அதற்கும் இதுபோலத்தான் சிபி பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த விவகாரத்தை பார்க்கும்போது குடும்பத்துக்குள் பிரச்சினையா என்ற கேள்விக்கு, திவ்யா சத்யராஜ் மிகவும் தெளிவாக பதில் அளித்துள்ளார்.
ஒரே வீட்டில் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் இருக்கும் அதனால் உறவுகள் மாறாது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தந்தையும் தம்பியும் தான் தனது உலகம் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
இந்த சம்பவம் சாதாரண அரசியல் விவாதம் இல்ல. ஒரு பக்கம் முன்பு விஜயை பாராட்டியவர் இப்போது விமர்சிக்கிறார். மற்றொரு பக்கம்
மகன் அதற்கு நேர்மாறாக நிற்கிறார். இதுதான் மக்களுக்கு எளிதாக கனெக்ட் ஆகும் விஷயமாக இருக்கிறது இதனால் இது பற்றி சோசியல் மீடியாவிலும் விவாதங்கள் எழுந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம்












Click it and Unblock the Notifications