கரு. பழனியப்பன் அதிரடி.. CM சேர்-க்கு 10 அடிதான்.. பூரித்த விஜயகாந்த் ஃபேன்ஸ்.. "வெரைட்டி" மணிவண்ணன்
சென்னை: விஜயகாந்த் போல கடுமையான உழைப்பாளியை நான் பார்த்ததில்லை என்பார் தியாகராஜன் சார்.. கேப்டன் விஜயகாந்த்தின் கடுமையான உழைப்புதான், அவரை உயரத்தில் கொண்டுபோக வைத்திருக்கிறது" என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியிருக்கிறார். இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
The Debate என்ற யூடியூப் சேனலுக்கு கரு.பழனியப்பன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் டைரக்டர் மணிவண்ணன், கேப்டன் விஜயகாந்த் பற்றி பூரித்து பேசியிருக்கிறார்.. கரு.பழனியப்பன் நெகிழ்ந்து சொன்ன பேட்டியின் சுருக்கம்தான் இது:

"எழுத்தாளர்களில் நிறைய பேரை எனக்கு பிடிக்கும் என்றாலும், சுஜாதாவை சற்று கூடுதலாக பிடிக்கும்.. அவரது எழுத்து பாணி எனக்கு பிடிக்கும்.. அவர் எழுதியது சரியா? சரியில்லையா? என்பது வேறு.. ஆனால், அவரது எழுத்த நடை கடைசிவரை மாறவே இல்லை. . பிரம்மாதமாக இருக்கும்.. கடினமாக விஷயத்தையும் எளிதாக எழுத்தில் சொல்லிவிடுவார்.
வேறு வேறு கோணம்: எப்போதுமே எனக்கு வித்தியாசமான கோணங்களில் படங்களை செய்யவே விருப்பம்.. என்னுடைய 5 படங்களும் வேறு வேறு வகையான படங்கள்தான்.. அந்தவகையில், என்னை மிகவும் இன்ஸ்பயர் செய்தவர் மணிவண்ணன்.. வித்தியாசமான படங்களை எடுத்தவர் மணிவண்ணன் மட்டுமே.. எல்லா வகையான படங்களும் அவரிடம் இருக்கும். ஒவ்வொரு டைரக்டர்களுக்கும் ஒருவித பாணி இருக்கும்.. ஆனால் மணிவண்ணன் ஒருத்தர் மட்டும்தான், எல்லா டைப்பிலும் படம் எடுத்தார்..
காதல் கதையா? இளமைக் காலங்கள் வெற்றிப்படம் தந்திருக்காரு.. கிரைம் திரில்லர் வேணுமா? நூறாவது நாள் வெற்றிப்படம் இருக்கு.. அரசியல் படம் தேவையா? அமைதிப்படை வெற்றிப்படம் இருக்கு.. கணவன் மனைவி கதையா? கோபுரங்கள் சாய்வதில்லை வெற்றிப்படம் இருக்கு.. கிராமத்து கதையா? சின்னத்தம்பி பெரிய தம்பி வெற்றிப்படம் இருக்கு. கதாநாயகனே இல்லாத படமா? முதல்வசந்தம் வெற்றிப்படம் இருக்கு..
மணிவண்ணன்: இப்படி எல்லாவகையான 100 நாள் வெற்றிப்படங்களையும் மணிவண்ணன் வைத்திருப்பார்.. சொல்லப்போனால் 175 நாள் வெற்றிப்படங்களை இந்திய சினிமாவில் வைத்திருந்த ஒரே டைரக்டர் மணிவண்ணன்தான்.
விஜயகாந்த்தை பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே ஆச்சரியமூட்டக்கூடியவையாகவே இருக்கும். அவர் கடுமையான உழைப்பாளி என்று சத்யஜோதி தியாகராஜன் சார் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ராத்திரி 2 மணி வரைக்கும் ஷூட்டிங்கில் நடித்து கொடுத்துவிட்டு, மறுபடியும் காலைல 7 மணிக்கு ஷூட்டிங்குக்கு வந்துடுவாராம் விஜயகாந்த்.
விஜயகாந்த்: அப்படி வேலை செய்தவரை இதுவரை பார்த்ததே இல்லை என்று தியாகராஜன் சார் சொல்வார். அவரது கடுமையான உழைப்புதான் அவரை உயரத்தில் கொண்டுபோக வைத்திருக்கிறது.
விஜயகாந்த் பற்றி ராதாரவி சொல்வதை கேட்க வேண்டும்.. அவரை பற்றி சொல்லும்போதெல்லாம் நெகிழ்ந்து பேசுவார் ராதாரவி.. "முதல்வருக்கு இன்னும் 10 அடிதான்.. எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தாச்சு, இன்னும் 10 அடி தூரத்தில் முதலமைச்சர் பதவி இருக்கு, ஆனால், விஜி இப்படி உடம்பை கவனிக்காம விட்டுட்டானே" என்று ராதாரவி சொன்னது எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்" என்றார் கரு.பழனியப்பன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications