போயஸ் கார்டனில் உதவி கேட்ட பிரபல நடிகர் குடும்பம்.. ஆடிப்போன சிவாஜி கணேசன்? பாண்டியன் சொல்றது நிஜமா?
சென்னை: சுதாகரனை தங்கள் குடும்பத்தில் திருமணம் செய்ததும், இதையடுத்து சுதாகரன் மீது தொடுக்கப்பட்ட கஞ்சா வழக்கும், இதனால் சிவாஜி குடும்பம் சுக்குநூறாக உடைந்தது குறித்தும், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "நாடகத்தில் நடித்து கொண்டிருந்த கணேசன், அண்ணாதுரைக்கு அன்று அறிமுகமாகிறார். காஞ்சிபுரத்தில் அண்ணாதுரை ஜவுளிக்கடையில் வேலைபார்த்தபோது, விழுப்புரத்தை சேர்ந்த கணேசனுக்கு ஒரு டெஸ்பேட்ச் நபராக வேலை வாங்கி தருகிறார்.. அந்தவகையில், காஞ்சிபுரத்திலிருந்துதான் சிவாஜிக்கு வாழ்க்கையே உருவாகிறது.

பிறகு "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில உணர்ச்சிபூர்வமாக நடிக்கிறார். அப்போது முதல், சிவாஜி என்று அடைமொழியை வைக்கிறார். அந்தவகையில், சிவாஜியும், அண்ணாதுரையும்தான், சிவாஜிக்கு ஆதர்ஷபுருஷர்கள். ஆனால், எந்த காலத்திலும் சிவாஜி கணேசன், அண்ணாவின் பெயரை சொன்னதே கிடையாது.
பராசக்தி: ஏவிஎம்மில் பராசக்தி என்ற புதிய படம் எடுக்க முடிவு செய்கிறார்கள். அப்போது சிவாஜியை ஹீரோவாக்க முடிவு செய்கிறார்கள். உடனே கண்ணதாசன், புதுமுகத்தை போட வேண்டாம் என்கிறார் அப்போது அண்ணாதுரைதான், சிவாஜியை சிபாரிசு செய்கிறார். கடைசியில் ஏவிஎம் சண்முக செட்டியார், சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
அதேபோல, சென்சார் போர்டில் இடம்பெற்றிருந்த ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்தவர், பராசக்தி வசனத்தை தடை செய்யாமல், படத்தில் இடம்பெற செய்தார். அவர்தான் போராடி இந்த பராசக்தி படத்துக்கு உதவினார். ஆனால், இதை சிவாஜியும், கருணாநிதியும் எங்குமே சொன்னதில்லை. அதிலும் தனக்கு வாழ்க்கை தந்த அண்ணாவை, சிவாஜி எங்குமே வெளியில் சொன்னதில்லை.
அரசியல்வாதிகள்: எனினும், அரசியல்வாதிகளின் அளவீடுகளை நன்றாகவே அறிந்து வைத்திருந்தவர் சிவாஜி கணேசன். தன்னுடைய பேத்தி அதாவது சாந்தியின் மகளை, சசிகலாவின் உறவினரான சுதாகருக்கு திருமணம் செய்தார்கள். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கும், சிவாஜியின் பேத்திக்கும் 100 கோடி ரூபாய் செலவில் நடந்த இந்த திருமணம் கின்னஸில் இடம்பெற்றதாகும்..
வளர்ப்பு மகன் என்பதால், ஜெயலலிதாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் , சிறுதாவூர், கொடநாடு பங்களா, போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் பஞ்சார ஹில்ஸ் இவை எல்லாமே சுதாகருக்கு வந்துவிடும், வளர்ப்பு மகன் என்பதால் அடுத்த முதல்வர் ஆகிவிடுவார், என்றெல்லாம் சொல்லி சிவாஜி குடும்பத்துக்கு சொல்லப்படுகிறது.
மிகப்பெரிய சோதனை: ஆனால், இந்த திருமணத்தை ஆரம்பத்திலிருந்தே சிவாஜி விரும்பவில்லை. அரசியல்வாதிகளுக்கு திருமணம் செய்து தந்தால், அது மிகப்பெரிய சோதனையை தந்துவிடும் என்று நினைத்தார். அதனால் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை..
அதற்கேற்றார்போல், பிரம்மாண்டமாக திருமணம் நடத்திய ஜெயலலிதா, நிழல் முதலமைச்சர் சசிகலா இருவருமே, கஞ்சா வழக்கில் சுதாகரை கைது செய்தனர்.. கஞ்சா வழக்கு என்றால், ஒரு வருட காலம் பிணை கிடையாது. இதனால் சிவாஜி குடும்பமே ஆடிப்போச்சு.
சிறையில் வாடுகிறார் சுதாகரன்.. அதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வரும்வழியில், போயஸ்கார்டனில் மொத்த சிவாஜி குடும்பமும் கையெடுத்து கும்பிட்டு நிற்கிறது. தங்கள் மகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, மருமகனை மன்னித்து விடுமாறு மடிப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறார்கள்.. ஆனால் ஜெயலலிதா கடைசிவரை மனம் இரங்கவில்லை.. இதனால், சிவாஜியிடம் சொல்லி, முதல்வர் ஜெயலலிதாவிடம் பேச சொல்கிறார்கள்.
அவமானம்: திருமணத்திலேயே உடன்பாடு இல்லாதபோது, ஜாமீனுக்கெல்லாம் பேச முடியாது என்று மறுத்தார் சிவாஜி கணேசன். ஒருவேளை தான் கேட்டும் ஜாமீன் தராவிட்டால், அது தனக்கு அவமானம் என்றும் சொல்லி, இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். எனவே, கடைசிவரை சிறையிலிருந்துவிட்டுதான், வெளியே வந்தார் சுதாகரன்.
இப்படி தங்கள் பெண்ணை கொடுத்து, மருமகன் மீது கஞ்சா கேஸ் தொடுத்ததில் சிவாஜியின் மொத்த குடும்பமும் அன்று அதிர்ச்சிக்கு உள்ளாகியது" என்றெல்லாம் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications