பிக் பாஸில் டிடிஎஃப் வாசன் மாட்டிக்கொண்டாரா? லைவில் நடந்த சம்பவம்.. செமயான குறும்படம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை எபிசோடுக்காக அதிகமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்று விஜய் சேதுபதி என்ன குறும்படம் போடுவார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பு தான் பலருக்கு இருக்கிறது. அதற்கு காரணம் டிடிஎப் வாசன் தான். அவர் இந்த வாரம் விளையாடிய விளையாட்டு வேற லெவலில் இருந்தது. வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த டிடிஎஃப் வாசனுக்கு விளையாட்டு புரியவில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவரால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கதி கலங்கி போயிருக்கின்றனர்.

கலாய்த்த போட்டியாளர்கள்

டிடிஎஃப் வாசன் வந்த முதல் வாரம் பெரிதாக விளையாட்டில் ஈடுபடாமலேயே இருந்து வந்தார். அதனாலயே இவருக்கு என்ன சொன்னாலும் தெரியாது, புரியாது என்று எல்லோரும் இவரை வசைப்பாடி வந்தனர். முகத்துக்கு நேராக கூட இவர் டம்மி பாவா என்று கிண்டல் செய்து கொண்டிருந்தனர் ஆனால் இந்த வாரம் டைமண்ட் டாஸ்க் வந்த முதல் நாளிலிருந்து அதை எப்படி தூக்க வேண்டும்? எங்கே ஒழித்து வைக்க வேண்டும்? என்று பக்கவாக பிளான் போட்டு அதை செயல்படுத்தியும் விட்டார்.

Bigg Boss TTF Vasan Vijay TV

தப்பிய டிடிஎஃப் வாசன்

வாசன் அந்த டாஸ்கில் விளையாடியதை பார்ப்பதற்கு திர்லர் மூவி போலவே இருந்தது. ஆனால் ஏற்கனவே ப்ரீத்திவ் டிடிஎஃப் வாசன் டைமண்ட் ஒழித்து வைத்திருந்த இடத்தில் பக்கத்தில் போய்விட்டார். ஐயோ எடுத்து விடுவாரோ என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர் திடீரென அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதேபோல நேற்று முகேஷ் அதே இடத்தில் டிடிஎஃப் வாசன் மூடி வைத்த கிரில் கம்பியை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் எடுத்து விடுவாரோ என்ற கேள்விதான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ஜஸ்ட் மிஸ்ஸில் டிடிஎஃப் வாசன் தப்பிவிட்டார்.

குறும்படம்

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி இந்த மொத்த குறும்படத்தையும் போடும்போது உள்ளிருக்கும் போட்டியாளர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே நேற்று விருது கொடுக்கும் டாஸ்க்கில் கூட வாசனுக்கு ஒன்னும் தெரியாது என்பது போல தான் அவரை கலாய்த்து இருந்தனர். ஆனால் இந்த வார விளையாட்டுக்கு ஹீரோவை அவர்தான் என்பது இன்று தான் தெரியும்.

Bigg Boss TTF Vasan Vijay TV

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆனாலும் நேற்று லட்சுமி பிரியா இவருக்கு அவார்டு கொடுக்கும்போது முகத்துக்கு நேராக காலை நீட்டி சூ போட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் டிடிஎஃப் வாசனுக்கு முதுகில் ஆபரேஷன் செய்திருந்ததால் அவரால் குனிய முடியாமல் கூட அவர் இப்படி போட்டு இருக்கலாம் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் உள்ளிருக்கும் சில போட்டியாளர்களும் அவருடைய இந்த செயலை கவனித்திருக்கிறார்கள்.

இந்த வார நாமதான் கெத்து என்று நினைத்து இவர் இதுபோல செய்து கொண்டிருக்கிறாரா? என்று பலர் திட்டி வருகின்றனர். இதனால் விஜய் சேதுபதி இன்று இதைப் பற்றி என்ன சொல்ல போகிறார்? டிடிஎப் வாசனை பாராட்ட போகிறாரா? அல்லது அவார்ட் ஃபங்ஷனில் அவர் செய்த செயலை வைத்து அவரை விமர்சிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+