கவலை வேண்டாம்.. நாங்க இருக்கோம்! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன், பண்டிகைக் காலத்திற்காக 1,790 சிறப்புப் பேருந்துகளும், தனியார் பேருந்துகள் மூலம் 727 பேருந்துகளும் என மொத்தம் 4,708 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 2,085 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவை அடுத்த இரண்டு நாட்களில் தேவைக்கேற்ப இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார்.

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

Chennai Special Bus Ayudha Pooja Holiday Transport Department

இதனால், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை

குறிப்பாக, நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விஜய் தமிழன் பார்த்திபன்

அப்போது, பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மாற்று ஏற்பாடாக தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசு பேருந்தில் ஏறிய அமைச்சர், பயணிகளிடம் நேரடியாகப் பேசி, தற்காலிகப் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, தங்களது பயணம் மகிழ்ச்சியாகவும், சிரமமின்றியும் இருப்பதாகப் பயணிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பண்டிகைக் காலம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனப் பயணிகள் தன்னிடம் தெரிவித்தனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில், அனைத்து அதிகாரிகளும் இணைந்து பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெட்வொர்க் வசதி குறைவாக இருப்பதாகப் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து அங்கு தற்காலிக நெட்வொர்க் வசதியை அதிகரிக்கும் வகையில் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

நெரிசல் தவிர்ப்பு

நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் தங்குவதால், அவர்களுடன் மற்ற பயணிகளும் சேர்ந்து கூட்டம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், பயணிகள் அமர்வதற்காக சுமார் 500 இருக்கைகள் அமைக்கப்பட்டு, பயணிகள் ஆங்காங்கே அமர வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து எம்.டி.சி. பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அறிவிப்பு சுவரொட்டி

இதனால், கிளாம்பாக்கம் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அறிவிப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன, எந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் பேருந்துகள்

சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன், பண்டிகைக் காலத்திற்காக 1,790 சிறப்புப் பேருந்துகளும், தனியார் பேருந்துகள் மூலம் 727 பேருந்துகளும் என மொத்தம் 4,708 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 2,085 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவை அடுத்த இரண்டு நாட்களில் தேவைக்கேற்ப இயக்கப்படும்.

கூடுதல் கட்டணம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனக்கு எந்தப் புகாரும் வரவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+