எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை! கடுங்கோபத்தில் சி.வி.சண்முகம்! என்ன செய்ய போகிறாரோ?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சி பதவியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அக்கட்சியால் பெற முடியவில்லை. இதனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் அதிருப்தி அடைந்தனர். பொதுவாக அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்யும். அதிமுகவால் பதவி, அதிகாரத்தில் இல்லாமலேயே இருக்க முடியாது என்கிறார்கள். அந்த அளவுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள்.

admk cv shanmugam

அது போல்தான் 2021 திமுக வென்றுவிட்டதா, அப்ப 2026 நம்ம ஆட்சிதான் என கருதியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்தது இந்த தேர்தல். இந்த தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் காரணம் என கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் சில எம்எல்ஏக்கள் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களது மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை இபிஎஸ் பறித்தார்.

சி.வி.சண்முகம்

இதையடுத்து மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் சென்றுவிட்ட நிலையில் சி.வி.சண்முகம் மட்டும் தனியாக எந்த பதவியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டச் செயலாளராக பசுபதியை இபிஎஸ் நியமித்தார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம், பசுபதி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

வேலுமணி

எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியிடம் சென்றாலும் அவருக்கு பழைய பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் சட்டசபையில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்தது.

இடைத்தேர்தல் தோல்வி

அண்மையில் நடந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் அதிமுகவினர் மேலும் சோர்வடைந்தனர். சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

அதிமுக பொதுக் குழு

அதிமுக பொதுக் குழுவை கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். எனினும் எடப்பாடி பழனிசாமி அசராமல் தனக்கு எதிராக செயல்படுவோரின் பதவிகளை பறித்து வருகிறார்.

100 பேரின் பதவி

ஏற்கெனவே சி.வி.சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்த போதே அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன. சி.வி.சண்முகம் தனித்து செயல்பட்டு வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்களை வரை 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோபத்தில் சண்முகம்

ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி மீது கடுங்கோபத்தில் இருக்கும் சி.வி. சண்முகம் தற்போது அவரது ஆதரவாளர்களின் பதவி பறிப்பால் அவர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+