கோவையின் அடையாளத்தை மாற்றிய திமுக! விஜய் இப்படி செய்வாரா என்பதெல்லாம் சந்தேகம்தான்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: நேற்று முன்தினம் வரை கோவையின் அடையாளமாக ஈஷா யோகா மையம் இருந்தது. ஆனால், நேற்று அந்த அடையாளத்தை திமுக மாற்றி காட்டியது. 'பெரியார் அறிவுலகம்' தான் இனி கோவையின் அடையாளமாக இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

திமுக இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால், ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட பணிகள் அனைத்தும் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

Isha Vijay TVK Tamil Nadu

கோவையின் முகங்கள்

கோயம்புத்தூருக்கு பல முகங்கள் இருக்கின்றன. சென்னையில் கூட ஃபெராரி காரை அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால், கோயம்புத்தூரில் ரோட்டுக்கு ரெண்டு சுற்றிக்கொண்டிருக்கும். அந்த அளவுக்கு பெரிய, பெரிய பணக்கார்களின் நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. எந்த பக்கம் பார்த்தாலும் தென்னை தோப்பு, ரியல் எஸ்டேட், சிறுவானி தண்ணீர் என பல வகைகளில் கோயம்புத்தூரை அடையாளப்படுத்தலாம். ஆனால், கோவையில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த இடம் எனில் அது ஈஷா மையம்தான். இதை பார்க்கவே பலரும் கோவைக்கு வருவதுண்டு.

திமுகவுக்கு தெரியும்

இப்படி இருக்கையில் நேற்று திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' மூலம் கோவையின் அடையாளத்தை திமுக மாற்றியிருக்கிறது. ஒரு சமூகம் அறிவார்ந்ததாக மாறுவது எவ்வளவு முக்கியம் என்பதை திமுக அரசு தெரிந்து வைத்திருந்தது. எனவேதான் 'அறிவுலகம்' போன்ற கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறது என கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

என்ன பலன்?

'பெரியார் அறிவுலகம்' வெளியிலிருந்து பார்ப்பதற்கு பளபளக்கும் கட்டிடமாகத்தான் தெரியும். இதுக்குள்ள என்ன இருக்கப்போகுது? அப்படியே இருந்தாலும்.. என்ன மாற்றத்தை இது ஏற்படுத்திவிடப் போகிறது? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சமூகத்தை அறிவார்ந்ததாக மாற்றுவதற்கு பின்னால் மொத்த நாட்டுக்கும் பலன் இருக்கிறது மக்களே!

வாசித்து பழக நூலகம், லட்சக்கணக்கான புத்தகங்கள், இ-புக்ஸ், படித்து பார்த்ததை அனுபவப்பூர்வமாக உணர ரோபோடிக்ஸ் மையம், புதிய தொழில்முணைவோர்களை ஊக்குவிக்க மையம், அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள தனி அரங்கம் என.. சர்வதேச தரத்தில் இந்த அறிவுலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மக்களிடையே பரவலாக வரவேற்பு இருக்கிறது.

ஏன் அறிவியல் முக்கியம்?

பல கோடிகள் செலவழித்து ஏன் இதை கட்ட வேண்டும்? நம்மில் பலரும் யோசிக்கலாம். இதற்கான பதிலை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில்.. ஒரு நாடு அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதற்கு முன்னர் எப்படி இருந்தது? அதன் பின்னர் எப்படி இருக்கிறது? என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அப்படி நம் கண் முன்னே மாறிய ஒரு நாடுதான் தென்கொரியா. 1950-1960களில் கொரிய போரால் தென்கொரியா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பசியும், பஞ்சமும், மூட நம்பிக்கைகளும், போலி அறிவியலும் இருந்தன. இந்த நேரத்தில்தான் அந்நாட்டு அரசு தைரியமாக ஒரு முடிவை எடுக்கிறது. KIST எனும் ஆராய்ச்சி நிறுவனத்தை அரசு தொடங்கியது. பள்ளிகளில் மனப்பாட முறையை கைவிட்டு, கேள்வி கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது. அறிவியல் ஆராய்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

விளைவு.. வெறும் 50 ஆண்டுகளில் சாம்சங், எல்ஜி, ஹூண்டாய் போன்ற சர்வதேச தர நிறுவனங்கள் உருவாகின. இன்றும் R&D குறியீட்டில் உலக அளவில் அந்நாட்டு 3வது இடத்தில் இருக்கிறது.

கேரளாவை பாருங்க

அவ்வளவு ஏங்க, பக்கத்துல இருக்குற கேரளாவை எடுத்துக்கோங்க! கேரளாவை பார்த்து 'இந்த மாநிலம் ஒரு மனநல மருத்துவமனை' என்று விவேகானந்தர் விமர்சித்திருந்தார். அந்த அளவுக்கு மூட நம்பிக்கைகளும், சாதி, மதம், பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவையை கொண்டிருந்த மாநிலம் இது. ஆனால் 1960-80களில் அம்மாநில அரசு KSSP என்கிற இயக்கத்தை முன்னெடுத்தது. தெருக்கூத்துக்கள், புத்தகங்கள் மூலம் மக்களிடையே அரசு அறிவியல் மனப்பான்மையை வளர்த்தது. இன்னைக்கு கேரளா வேற லெவலில் இருக்கின்றன. கொரோனா தொற்றை அம்மாநில அரசு கையாண்ட விதத்தை பார்த்த உலக சுகாதார மையம் (WHO), வெகுவாக பாராட்டியிருந்தது.

இதையெல்லாம் பார்த்துதான் திமுக 'பெரியார் அறிவுலகத்தை' கட்டியிருக்கிறது. ஆனால் மத நம்பிக்கை கொண்ட முதலமைச்சர் விஜய், 'பெரியார் அறிவுலகம்' போல அல்லது அதைவிட சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்க முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+