சந்தோஷமாக திரிஷா வெளியிட்ட பதிவு.. நயன்தாரா கொடுத்த ரியாக்ஷன்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகை திரிஷா இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் ஒரு போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புடவையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் அவர், அந்த புகைப்படத்துடன் "தீபங்கள் ஜொலிக்கட்டும்" என்ற அர்த்தத்தில் கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல ரசிகர்கள் அவருடைய அழகைப் பாராட்டி வரும் நிலையில், இந்த பதிவில் இன்னொரு விஷயம்தான் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. அது வேறொன்றுமில்லை, நடிகை நயன்தாரா இந்த புகைப்படத்துக்கு லைக் போட்டிருப்பதுதான்.
இப்போது திரிஷாவும் நயன்தாராவும் ஒரே துறையில் இருக்கும் இரண்டு பெரிய நடிகைகள். இருவருமே பல வருடங்களாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறதா? இருவருக்கும் ஏதாவது மனக்கசப்பு இருக்கிறதா? என்ற பேச்சு மட்டும் அவ்வப்போது வந்துகொண்டே இருந்தது.
நயன்தாரா சொன்ன வார்த்தை
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சில வருடங்களுக்கு ஒரு பேட்டியில் நயன்தாராவிடம் திரிஷாவுடனான நட்பு குறித்து கேட்கப்பட்டபோது, இருவரும் நெருங்கிய தோழிகள் என்று சொல்லும் அளவுக்கு பதில் வரவில்லை. சினிமா துறையில் நட்பு என்பது எளிதாகச் சொல்லிவிடக்கூடிய விஷயம் இல்லை என்ற ரீதியில் நயன்தாரா பேசியிருந்தார். இதை வைத்து இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

இணைந்த திரிஷா, நயன்தாரா
இப்படி இருக்கும்போதுதான் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று நயன்தாராவும் திரிஷாவும் துபாயில் சொகுசு படகில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்தார்கள். இருவரும் கருப்பு நிற உடையில், கடல் காற்றை ரசித்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் அந்த போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவின. அப்போது பலரும், "அட, இத்தனை நாளா இவங்களுக்குள்ள பிரச்சனைன்னு பேசினாங்களே... இப்போ இப்படி ஒண்ணா இருக்காங்களே!" என்று ஆச்சரியப்பட்டார்கள்.
அந்த புகைப்படங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே நட்பு மீண்டும் மலர்ந்துவிட்டதா என்ற பேச்சும் எழுந்தது. இப்போது திரிஷா புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்துக்கு நயன்தாரா லைக் போட்டிருப்பதும் அதே பேச்சை மீண்டும் கிளப்பியிருக்கிறது. ஒரு லைக் போட்டதற்காகவே இருவரும் நெருங்கிய தோழிகள் என்று முடிவெடுத்துவிட முடியாது. ஆனாலும், முன்பு இவர்களை பற்றி வந்த பேச்சுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த சின்ன விஷயம்கூட ரசிகர்களுக்கு பெரிய செய்தியாகிவிடுகிறது. எப்படி விஜய் அஜித் இருவரும் எதிரிகள் எனீறு ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்களோ அதே போலத்தான் இவர்கள் விஷயத்திலும் நடந்தது. ஆனால் விஜயும் அஜித்தும் நண்பேண்டா என்று சமீபத்தில் காட்டி விட்டார்கள் அதேபோல இப்போ திரிஷாவும் நயன்தாராவும் செய்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் பேச்சு
நடிகைகள் நன்றாக பேசிக்கொண்டால்கூட அதற்கு ஒரு கதையை உருவாக்கிவிடுவார்கள்; பேசாமல் இருந்தால் அதற்கும் ஒரு கதையைச் சொல்லிவிடுவார்கள். திரிஷா, நயன்தாரா விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது இருவரும் ஒன்றாகப் புகைப்படம் வெளியிட்டதும், ஒருவருடைய பதிவுக்கு இன்னொருவர் லைக் போடுவதும் பார்க்கும்போது, அவர்களுக்குள் பிரச்சனை இருப்பதாகப் பேசப்பட்ட பழைய கதைகளை ரசிகர்கள் மீண்டும் பேசுகிறார்கள்.




Click it and Unblock the Notifications
