பிக் பாஸில் டைமண்ட் திருடி டிஆர்பியை ஏற்றிய TTF வாசன்.. ஆனால், இப்படி ஒரு விஷயம்? ஆப்பு யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டைமண்ட் திருடி டிடிஎஃப் வாசல் ஒழித்து வைத்தது தான் பெரிய அளவில் டிஆர்பிஐ ஏற்றி விட்டது. அதற்காக அது அவர் என்னதான் செய்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே நல்லிரவு வரைக்கும் லைவ் பார்த்தவர்கள் ஏராளம். இன்றும் அந்த விவாதம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. டைமண்ட்ரடை டிடிஎஃப் வாசன் திருடி இருந்தாலும் அது ஸ்கிரிப்ட் என்ற விவாதமும் எழுந்து வருகிறது.
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி பல வருஷமாக இருந்து வருவது போல, பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டா? இல்லை ரியலா? என்ற கேள்வியும் ஒவ்வொரு சீசனிலும் எழுந்து விடுகிறது. தற்போது 10வது சீசன் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது, மற்ற மொழிகளில் பல சீசன்கள் கடந்து விட்டது. இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சில நாட்கள் சண்டை சச்சரவு மட்டுமே இருந்தாலும் சில நேரங்களில் நிகழ்ச்சியை பார்க்க வைக்கும் அளவிற்கு சுவாரசியமாகவும் உள்ளே சில ஜாலியான கண்டெண்டும் கிடைக்கிறது. ஆனால் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த டிடிஎஃப் வாசன் தான் இப்போ இந்த நிகழ்ச்சியை பற்றி பேச வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் அப்டேட்
வாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் இவருக்கு கேமே புரியாது, நாம என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டார் ஒண்ணுமே தெரியாது என்று எல்லா போட்டியாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் நீங்க என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க நான் என்னுடைய குறிக்கோளில் கவனமாய் இருக்கிறேன் என்று நேற்று டாஸ்க்கில் காட்டிவிட்டார்.
டைமண்ட்டை எப்படி திருடலாம்? அதை எங்கே ஒளித்து வைக்கலாம் என்று முன்கூட்டியே அவர் போட்ட பிளான் வேற லெவலில் இருந்தது. என்னங்க திருட்டுக்கு இப்படி சப்போர்ட் பண்றீங்களே என்று நினைக்கலாம். ஆனால், இது டாஸ்க்.. அந்த டாஸ்க்கில் அப்படித்தான் விளையாட வேண்டும். அதில் ஜெயித்தால் தான் அவர் வின்னர். ஆனால் ஒரு ஒரு சம்பவமும் செய்துவிட்டார். தான் திருடி விட்டேன் என்பதை கேமரா முன்பு சொல்ல வேண்டும். அதை வழக்கம் போல வாசன் மறந்துவிட்டார்.
ரசிகர்கள் ரியாக்சன்
அதுமட்டுமல்லாமல் இது உண்மையான டைமன்டா? அல்லது போலியா என்ற குழப்பமும் அவருக்கு வந்துவிட்டது. சரி என்ன நடந்தாலும் பரவாயில்லை அவர் செய்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் டைமண்ட் தேடிக் கொண்டிருந்தபோது எங்க கிடைத்து விடுமோ... கிடைத்து விடுமோ.. என்று பயந்தபடியே பலர் லைவ் பார்த்து டைமண்ட் யாரு கையிலும் கிடைக்கக்கூடாது என வேண்டிக் கொண்டு இருந்தனர்.
டைமண்ட் திருடிய வாசன்
ஆனால் போட்டியாளர்கள் டைமண்ட் தேடிக் கொண்டிருந்தபோதுதான் ஒரு விஷயத்தை அனைவரும் கவனித்து இருக்கின்றனர். எல்லா இடத்திலும் பார்த்த போட்டியாளர்கள் டிடிஎஃப் மறைத்து வைத்த இடத்தை மட்டும் பார்க்காமல் விட்டுவிட்டனர். அதை பார்க்கும் போது ஏற்கனவே சொல்றது போல இந்த நிகழ்ச்சி டிஸ்கிரிப்ட் தானா? பிக் பாஸ் இந்த இடத்தை நீங்க பார்க்க கூடாது என்று சொல்லிவிட்டாராக? என்று கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு வெளியே வந்து வாசனை விளக்கம் கொடுத்தால் தான் தெரியும்.
வாசன் டயலாக்
ஆனாலும் நேற்று வாசன் காட்டிய கெத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இன்று கூட, நீங்க சும்மா பேசினாலே எனக்கு புரியாது, இப்போ புரியாத மாதிரி பேசுனா சுத்தமா புரியாது என்று வாசன் பேசிய டயலாக் கூட இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. எப்படியும் இந்த வார எபிசோடில் விஜய் சேதுபதி அவர் எப்படி திருடினார் என்று குறும்படம் காட்டும்போது தான் மற்ற போட்டியாளர்களுக்கு உள்ளே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.




Click it and Unblock the Notifications
