பயப்படாதமா.. நான் உன் பெரியப்பா.. அமைச்சர் விஜய் பார்த்திபனால் திகைத்த பெண் பயணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் செயல்பாடுகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகிறது. அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து ரீல்ஸ் பதிவிடுவது அதிகமாவதாகவும் புகார் எழுந்துள்ளது. தொடர்விடுறை காரணமாக பேருந்து ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விஜய பார்த்திபன் கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்தார். அப்போது பெண் பயணி ஒருவரிடம், பயப்படாதமா. நான் உன் பெரியப்பா என கூறிய வீடியே வைரலாகி வருகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, சனி, ஞாயிறு என்று 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால் மக்கள் வெளியூர் பயணிக்கிறார்கள். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் தரையில் சில இளம் பெண்கள் அமர்ந்திருந்திருந்தனர். அவர்களிடம், ஏன்மா இங்க உக்காந்திருக்கீங்க என பார்த்திபன் கேட்டார். அவர்கள் எழுந்தவுடன், பரவாயில்லை உக்காருங்க. எந்த ஊருக்கு போகறதுக்காக வந்திருக்கீங்க. புக்கிங் செய்திருக்கீங்களா என்று கேட்டார்.

Vijay Parthiban Passenger


நான் உன் பெரியப்பா

அதற்கு பெண்கள் சற்று தயங்கினர். உடனே பார்த்திபன், பயப்படதாமா. சொல்லு. நான் உங்க பெரியப்பா போதுமா. உங்க அப்பாவுடைய அண்ணனாக என்னை நினைச்சுக்கோ. ஏன் இவ்வளவு நேரம் இங்க உக்காந்துட்டு இருக்கீங்க என்று கேட்டார். பஸ் ரிசர்வ் பண்ணிருக்கோம். வர இன்னும் டைம் இருக்கு. அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்று பெண்கள் கூறினர். கீழே உக்காராதீங்க. அங்கே சேர் இருக்கு. அதில் போய் உக்காருங்க என்று கூறினார். அந்த பெண் என்ன பதில் சொல்தென தெரியாமல் திகைத்தார்.

மேலும் பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் அமர்ந்திருந்த பெண்கள் உள்ளிட்ட மக்களிடம், சேர் அங்க போட்ருக்கு. அதை பார்க்கலையா. அங்க போய் உக்காருங்கமா என்று கூறினார். மற்ற பயணிகளிடமும், எந்த ஊருக்கு போகறீங்க. ரிசர்வேஷன் பண்ணிருக்கீங்களா. அன்ரிசர்வ்டா. ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா. பேருந்து இருக்கிறதா. வேறு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று கேட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+