கவுண்டமணி என் உறவினர் தான்.. அவர் அவராகவே இல்லை! எமோஷனலாக பேசிய கே.எஸ். ரவிக்குமார்
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பிரபலமான கே எஸ் ரவிக்குமார் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது நடிகர் கவுண்டமணி தனக்கு நண்பர் மட்டுமல்ல நெருங்கிய உறவினர் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் காமெடியனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கிய கவுண்டமணி ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

கவுண்டமணி மனைவி இறப்பு
ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. காமெடியானாக நடிக்கும் போது இவரிடம் கால்ஷீட் கேட்டு விட்டு பிறகுதான் கதாநாயகர்களையே கமிட் செய்த கதை எல்லாம் உண்டு. ஆனால் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்
அமைதியான குடும்பம்
சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கி இருந்தார். அதற்கான பிரமோஷனில் கூட கலந்து கொண்டு பேசியிருந்தார். என்ன தான் கவுண்டமணி சினிமாவில் பலருக்கும் பிரபலமாக இருந்தாலும் அவருடைய குடும்பத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கிடையாது. தன்னுடைய குடும்ப ஃபங்ஷனில் மட்டும்தான் மனைவி மற்றும் குழந்தைகளை கூட்டி வந்திருக்கிறார்.
குடும்பத்தை மறைத்த கவுண்டமணி
திரைப்பட விழாக்கள், திரைப்பட பங்க்ஷன் என்று எதிலும் தன்னுடைய குடும்பத்தை காட்டாமல் இருந்த கவுண்டமணிக்கு நேற்று பெரிய அதிர்ச்சி செய்தி கிடைத்தது. இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்த அவருடைய மனைவி நேற்று காலமானார். இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்திருக்கிறது. பல பிரபலங்கள் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்கள்.
கே எஸ் ரவிக்குமார் பேட்டி
அப்போது கே.எஸ். ரவிக்குமாரும் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கவுண்டமணியை எனக்கு பல வருடங்களாக தெரியும். இப்போது அவர் உடைந்து போய் இருக்கிறார். அவர் அவராகவே இல்லை. அவர் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் விரைவில் இதிலிருந்து வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கவுண்டமணியை ஒரு நடிகராக எல்லோருக்கும் தெரியும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல என்னுடைய உறவினரும் தான்.
உறவினரான கவுண்டமணி
நாட்டாமை படம் பண்ணிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் கேரவேனில் வைத்து அவர் என்னிடம் சொன்னார். என்னுடைய மனைவி முதலியாரில்தான் என் மகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அதனால் முதலியார் சம்பந்தம் ஏதாவது இருந்தா பாரு என்று என்னிடம் சொன்னார். அப்போது என்னுடைய சொந்த மாமன் மகன் ஜாதகம் மற்றும் இன்னும் சில ஜாதகத்தை கொடுத்தேன்.
கண் கலங்கிய கவுண்டமணி
அதனை பார்த்துவிட்டு கடைசியில் என்னுடைய மாமன் மகனை தான் கவுண்டமணியின் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். அதனால் அவர் என்னுடைய உறவினர். அவருடைய வீட்டிற்கு நான் அடிக்கடி வந்து இருக்கிறேன். அப்போது அவருடைய மனைவி இறந்துவிட்டார் என்று செய்தியை கேட்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல நடிகர் செந்தில், நிழல்கள் ரவி, விஜய் உட்பட சில நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர். அப்போது விஜய் தன்னுடைய கஷ்டத்தில் பங்கு எடுத்துக் கொள்வதற்காக வந்ததை பார்த்து கவுண்டமணி நெகிழ்ச்சி அடைந்திருந்தார். தம்பி வந்ததுக்கு சந்தோஷம் என்று தழுதழுத்த குரலில் பேசி இருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications