திருநெல்வேலி Slang-னு எதுவும் இல்ல.. சாதிக்கு தான் Slang இருக்கு.. மாரி செல்வராஜ் சொன்ன காரணம்
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய "வாழை" திரைப்படம் தியேட்டரில் வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திருநெல்வேலி Slang என்று எதுவும் கிடையாது, சாதிக்கு தான் Slang இருக்கு என்று பேசியது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவாகிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுவரைக்கும் அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் வெற்றியாகிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தேசிய விருதும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பெற்றிருக்கிறது. அதுபோல தனுஷ் நடித்த கர்ணன், மாமன்னன் உட்பட பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வாழை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படமும் தியேட்டர்களில் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊர் திருநெல்வேலி உள்ள புளியங்குடி என்ற கிராமம்தான். இந்த கிராமத்தில் இருந்து நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
அப்போது ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களிலும் ராமின் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு தான் மாரி செல்வராஜ் இயக்குனராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி குறித்து பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது அதில் அவர் பேசுகையில் திருநெல்வேலி ஸ்லாங்குனு கிடையாது. அங்கு ஜாதிக்கு தான் ஸ்லாங்கு இருக்கு. சினிமாக்களில் காட்டுவது திருநெல்வேலி கிடையாது. திருநெல்வேலி ஒரு ஜாதிக்கு ஒரு ஸ்லாங்கு இருக்கும். அங்க அப்படித்தான் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்க ரொம்ப நுணுக்கமா பாத்தா ஒருத்தங்க பேசுறதை வச்சு அவங்க என்ன சாதி என்று கண்டுபிடித்துவிடலாம்.
எலி, பாம்பு கறி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறோம்.. ஓபன் ஆக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்
சினிமாக்கு என்று திருநெல்வேலி ஸ்லாங் பேசுறாங்க ஆனா திருநெல்வேலியின் உண்மையான ஸ்லாங் அது கிடையாது. நான் என்னுடைய அம்மாவை "யம்மோ" என்று கூப்பிடுவேன். "யம்மோ சாப்பாடு இருக்கா" என்று கூப்பிடுவேன். ஆனால் இன்னொரு நண்பன் அவனுடைய அம்மாவை "ஆத்தா" என்று கூப்பிடுவான். அதுபோல இன்னொரு நண்பன் "அம்மே" என்று கூப்பிடுவான். இன்னொரு நண்பன் "அம்மா" என்று கூப்பிடுவார்கள்.
இப்படி அம்மாவையே பலவிதமான கூப்பிடக்கூடிய வழக்கம் திருநெல்வேலியில் இருக்கு. அதுபோல திருநெல்வேலியில் பொது தலைவர்களை ஜாதி தலைவர்களாக மாற்றுகிறார்கள் என்ற கோபம் தான் எனக்கு ஒரு வலியாக இருக்கிறது. அதை எப்படியாவது மாத்தணும், புதுசா இந்த உலகத்தை பார்க்கிற ஜெனரேஷன் கூட ஒரு தலைவரை சாதி தலைவரா பார்க்க கூடாது என்று தான் மாமன்னன் படத்தில் நான் பேசினேன் என்று அந்த பேட்டியில் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications