என்ன அப்பான்னு சொல்லுறியே நீ எனக்கா பிறந்த? மிஸ்கினை அசிங்கப்படுத்திய இளையராஜா! மனுஷன் கலங்கிட்டாரு
சென்னை: இயக்குநர் மிஸ்கின் இளையராஜாவை தன்னுடைய அப்பா என்று பல இடங்களில் சொல்லிக் கொண்டு இருப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட இதை சொல்லி இருக்கிறார். ஆனால் மிஸ்கின் இப்படி சொல்வதால் கடுப்பான இளையராஜா அவரை நேரடியாக திட்டிவிட்டாராம். இதனால் மிஸ்கின் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.
மிஸ்கின் இளையராஜாவின் இசையில் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ என பல படங்களை இயக்கி இருக்கிறார். கோலிவுட்டில் தனித்துவமான இயக்குநராக கொண்டாடப்படும் மிஸ்கின் எந்த இடத்திலுப் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். சில நேரங்களில் அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி விடும். சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி அறிமுகமானார்.

அதுபோல இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் தனித்துவமாகவும் ரசிகர்களை எளிதாக கவரும் வகையிலும் இருக்கும். ஒரு பக்கம் இயக்கத்தில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கின்ற கேப்பில் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். வணங்கான், மாவீரன், டிராகன் என ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பாலும் ரசிகர்களை மிரட்டி கொண்டிருக்கிறார்.
இது மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்களின் திறமையை வியந்து சில இடங்களில் பாராட்டியிருக்கிறார். அது சில இடங்களில் சில போட்டியாளர்களை தனக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் கிண்டல் செய்து வருகிறார். சிலருக்கு தன்னுடைய படத்திலும் வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அதுபோல மிஷ்கின் எப்போதுமே இளையராஜாவை அப்பா என்று தான் கூப்பிடுவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யுவன் கெஸ்ட் ஆக வந்திருந்த போது கூட அவரிடமும் இளையராஜா உனக்கு மட்டுமல்ல எனக்கும் அப்பா தான். அவர் இந்த ஊருக்கே அப்பா. அவருடைய பாடலால் அனைவரையுமே தாலாட்டி கொண்டிருக்கிறார், என்றெல்லாம் பேசி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இளையராஜாவை நான் அப்பா என்று தான் கூப்பிடுவேன். ஒரு நாள் பாடல் தொடர்பாக எங்கள் இருவருக்கும் சண்டை போய்க்கொண்டே இருந்தது. அவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். நான் அப்பா, அப்பா அப்பான்னு சொல்லி சண்டை போட்டேன். அந்த நேரத்தில் போனை கட் பண்ணி வைத்து விட்டார்.
பிறகு கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்டு என்னை அப்பானு கூப்பிடாத.. நீ என்ன எனக்கா பிறந்த? என்று கேட்டார். நான் ஒரு மணி நேரமா அங்கேயே நின்று உடைந்து அழுதேன். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப அழுதது அன்றைக்கு தான் என்று வருத்தத்தோடு மிஸ்கின் பேசி இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications