ரவீந்தர் சோக போஸ்ட்க்கு காரணம் இதுவா? மாமியார் மருமகளுக்குள் இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: இயக்குனர் ரவீந்தர் சில நாட்களுக்கு முன்பு சோகமாக வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரவீந்தருக்கு அவருடைய மனைவி மகாலட்சுமியோடு பிரிவு ஏற்பட்டு விட்டதாக செய்திகள் பரவி வந்தது.
இந்த நிலையில் தான் எதற்காக அப்படி செய்தேன் என்று ரவீந்தர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் திடீரென்று திருமணம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் எளிமையாக திருமணத்தை செய்திருந்தனர். ஆனால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் முடிந்து சுமார் எட்டு மாதங்கள் ஆகின்ற நிலையில் ரவீந்தர் சில நாட்களுக்கு முன்பு சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளத்தை புரட்டி போட்டு விட்டது. ரவீந்தருக்கும், மகாலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. அதனால் இருவரும் பிரிந்து இருக்காங்க. இந்த வருத்தத்துல தான் ரவீந்தர் இப்படி எல்லாம் போஸ்ட் போடுறாங்க என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லி இதை பரபரப்பு ஆக்கிவிட்டனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு பிறகு மகாலட்சுமி ரவீந்திரோடு ஜோடியாக எடுத்த போட்டோவை பதிவிட்டு, அந்தப் பதிவிலேயே ரவீந்தரை திட்டவும் செய்திருந்தார். நான் அப்பவே சொன்னேன். இந்த மாதிரி போட்டோவை எல்லாம் பதிவிடாதிங்கனு, ஆனா நீங்க கேட்கல, அதனாலதான் இப்படி எல்லாம் நம்மை பற்றி வதந்தி பரவி வருகிறது. ஆனாலும் எங்களுக்கு எண்டு கிடையாதா? என்று நெட்டிசன்களை கலாய்க்கவும் செய்திருந்தார்.

இந்த நிலையில் ரவீந்தர் அவரையே அவர் கேள்வி கேட்பது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எதற்காக சோகமாக தனியா இருக்கிற மாதிரி போஸ்ட் போட்டேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் நேரம் போகிறதுக்காக சும்மா போட்டேன். அதுவும் நான் ஒல்லியா இருக்கும்போது எடுத்த போட்டோவை தான் தேடி பிடித்து என் காலத்துல ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு பாட்டை வைத்து எடிட் செய்து போட்டேன். ஆனால் அது இந்த அளவுக்கு வைரல் ஆகும்னு எதிர்பார்க்கல.
நாங்க இன்னும் ட்ரெண்டிங்கில நான் இருக்கிறோம் என்பதை அப்போ தான் புரிஞ்சுகிட்டேன் என்று ஜாலியாக பேசி இருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் எல்லா வீட்டையும் போல எங்க வீட்டிலேயும் சண்டை வரும். அது எதுக்காகனா அது என்னை வச்சி தான் வரும். அது எங்க வீட்ல மட்டும் இல்ல பல வீட்டுல நடக்குதுறது தான். பொதுவா ஒரு அம்மா என்ன நினைப்பாங்க? கல்யாணத்துக்கு முன்னாடி தான் நம்ம பையன் கடையில் சாப்பிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கான். இனி ஒரு மனைவி வந்தா வீட்டில சமையல் செஞ்சு சாப்பிட்டு நல்லா இருப்பானு நினைப்பாங்க.
ஆனா என் பொண்டாட்டியும் சூட்டிங்கில் பிஸியா வேலை செஞ்சுட்டு வீட்டில் வந்து எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் எனக்காக செய்ய ட்ரை பண்ணுவா. அப்போ நம்ம குடும்பத்தை பார்க்கவா இல்ல நம்ம ப்ரொபஷனல பார்க்கவா என்று ஒரு சிந்தனை வரும்போது பல நேரங்களில் நான் இனி நடிப்பை விட்டு விடுவேன் என்று என் பொண்டாட்டி சொல்லி இருக்காங்க. அது நடக்கிற காரியம் கிடையாது. அவங்க எவ்வளவு இந்த வேலையை நேசிக்கிறாங்கனு எனக்குத்தான் தெரியும்
ஆனா மாமியார் முன்பு புருஷனை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக போட்டி போட்டு ஏதாவது செய்யணும்னு ட்ரை பண்ணுவாங்க. இந்த மாதிரி தான் எங்க வீட்டுல நடந்துட்டு இருக்குது. ஆனா பெரிய அளவில் எங்களுக்குள்ள சண்டை எல்லாம் எதுவும் கிடையாது. இதை தெரியாம தான் பலரும் அப்படி இப்படி என்று கிளப்பி விடுறாங்க என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications