கோலங்கள் சீரியலால் நான் நிறைய இழந்து இருக்கேன்.! எதிர்நீச்சலின் கடைசி முடிவு இதுதான்-திருச்செல்வம்
எதிர்நீச்சல் சீரியலின் கடைசி முடிவு இதுதான் என்று அந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்
சென்னை: இயக்குனர் திருச்செல்வன் பல வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் ஏற்கனவே அவர் இயக்கி, நடித்த கோலங்கள் சீரியல் பற்றி தற்போது சில தகவல்களை கூறி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலின் முடிவு பற்றி இயக்குனர் பேசிய தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டிஆர்பியில் முன்னணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதைகளும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தும் கட்டமைப்பில் இருந்து அவர்கள் தங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக படும் போராட்டங்களை பற்றியதாக இருந்து வருகிறது. இப்போதைய சூழ்நிலையிலும் பல இடங்களில் ஆண் ஆதிக்கம் கொடி கட்டி பறந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த சீரியல் தோலுரித்து கட்டி இருக்கிறது என்று இந்த சீரியலுக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோலங்கள் தொல்காப்பியன்
எதிர்நீச்சல் சீரியலில் ப்ரோமோ சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிமிடங்களில் லைக்குகள் மில்லியன் கணக்கில் குவிந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் கமெண்ட்களும் எந்த சீரியலுக்கும் இல்லாத வகையில் இந்த சீரியலுக்கு குவிந்து கொண்டிருக்கிறது .பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இதுவும் இந்த சீரியலுக்கு மேலும் ஒரு சிறப்பு. ஏற்கனவே கோலங்கள் சீரியல் மூலமாக ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் தொல்காப்பியன் என்ற தொல்ஸ் ஆக இடத்தைப் பிடித்து இருக்கும் திருச்செல்வம் தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் தன்னுடைய திறமையை விட்டு விலகாமல் இருக்கிறார்.

இழந்த வாய்ப்பு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் திருச்செல்வன் கோலங்கள் சீரியலால் நான் பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன். அந்த நேரத்தில் சீரியல் இயக்கிக் கொண்டிருக்கும் போது பலர் திரைப்படங்களை இயக்க தொடங்கி விட்டார்கள். குறிப்பாக சமுத்திரக்கனி கூட அப்போது என்னை போல சீரியல் தான் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வாய்ப்பு வந்ததும் டக்கென்று மாறிவிட்டார். நானும் ஏற்கனவே திரைப்படங்களில் இருந்து தான் சீரியலுக்கு வந்திருந்தேன். ஆனால் என்னால் அப்படி போக முடியவில்லை நான் ஒரு இயக்கி ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கும் சீரியலை விட்டுப் போக எனக்கு மனதில்லாமல் அந்த சீரியலிலே இருந்துவிட்டேன். அதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

முடிவு எப்போது
அது மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் இப்போது வரைக்கும் நல்ல ஒரு நிலையில் சென்று கொண்டிருக்கிறது. அதிகமான பாசிட்டிவ் கருத்துக்கள் எனக்கு வந்த வண்ணமாக இருக்கிறது. இனி இந்த சீரியலில் இருக்கும் பெண்களுக்கு சிறு துரும்பு போல ஒரு கயிறு கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிப்பார்கள். அந்த மாதிரி தான் சீரியல் போகப் போகிறது. கோலங்கள் சீரியலில் தனக்கு 400 எபிசோடுகளுக்கு மேலே கிடைத்த ரசிகர்கள் எனக்கு இந்த சீரியலில் 150 எபிசோடு கிடைக்க தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் எப்போது ரசிகர்கள் சுவாரசியம் குறைகிறது என்று நினைக்கிறார்களோ அப்போதுதான் அதற்கான முடிவு தெரியும் என்று கூறியிருக்கிறார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications