தொடர்ச்சியாக சீரியல் பார்த்தவர்களுக்கு இத்தனை பிரச்சனைகள் வருமா? இது தான் ஹைலைட்டாமே
சென்னை: தமிழில் முன்னணி சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் லாஜிக் இல்லாமல் இருப்பதாகவும் அதே சீரியல்களை தொடர்ந்து பார்த்து வருவதால் பெண்களுக்கு மனநோய் உண்டாகும் என்று பிரபல மருத்துவர் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சீரியல் கதைகள் ஒரு சில கதையை மையமாக கொண்டு தான் கதை நகர்ந்து வருகிறது.

அதை தொடர்ச்சியாக பார்த்து வருவதால் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக டிவி சேனல்கள் பொதுமக்களிடம் பிரபலமாக தொடங்கிய காலகட்டத்தில் செய்தி சேனல்கள் மட்டும் தான் அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்கள் டிவி சேனல்களில் ஒளிபரப்ப தொடங்கினர். அதற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கிய பிறகு படிப்படியாக சீரியல்களும் டிவிகளில் ஒளிபரப்ப தொடங்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதற்கு போட்டியாக இப்போது விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்கள் வழங்கப்பட்டு ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பொதுவாக ஒரே கதை தான் எல்லா சீரியலிலும் இடம் பிடிக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சீரியல் டிஆர்பிக்கு தகுந்த மாதிரி கதையில் ட்விஸ்ட் கொண்டு வர வேண்டும் என்பதற்காக சீரியல் தரப்பில் பல அபத்தமான காட்சிகளும் தாராளமாக எடுத்து வைக்கிறார்கள்.
பல சீரியல்களில் கதாநாயகன் பணக்கார வீட்டு பையனாக இருப்பான். கதாநாயகி கஷ்டப்பட்ட பொண்ணாக இருப்பார். எதிர்ப்பாராத விதமாக கல்யாணம் நடந்து விடும் ஆனால் மாமியார் அந்த பெண்ணை தன்னுடைய மகனோடு வாழ விடாமல் பிரச்சனை செய்வார். அதுபோல அந்த பையனுக்கு ஏற்கனவே ஒரு அத்தை பொண்ணு அல்லது காதலி இருக்கும் அவரும் அதே வீட்டில் வந்து இருந்து கொண்டு நான் உன்னுடைய மனைவியோடு வாழ விட மாட்டேன் என்று வில்லதனம் செய்து கொண்டிருப்பார். இப்படித்தான் பல சீரியல்களில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதை சீரியலாக பார்த்தால் பலருக்கும் நல்லது. ஆனால் இந்த மாதிரி கதையை தொடர்ச்சியாக அனைத்து சீரியல்களிலும் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இதே சிந்தனை மனதிற்குள் தோன்றிவிடும் அப்படி தோன்றி விட்டால் சமுதாயத்தில் நிலைமை என்னவாக மாறும் என்பது பலருடைய பயமாகவும் இருக்கிறது. அதுபோல சில நாட்களுக்கு முன்பு பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் கதாநாயகிக்கு திடீரென்று அபார்சன் ஆகிவிட்டது.
அவருக்கு இரண்டு குழந்தைகள் கருவில் இருந்தது தெரிந்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருந்த நிலையில் திடீரென்று அபார்சன் ஆகிவிட்டதால் கணவர் ஒரு பக்கம் என் குழந்தையை கொன்று விட்டாயே என்று மனைவியை அடிக்கிறார். மாமனார் மாமியார் என அனைவருமே அந்த பெண்ணுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி ஒரு சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கும் இதே சிந்தனை தானே வரும் என்பது பலரும் யோசிக்காத விஷயமாக இருக்கிறது.
மிஷ்கரேஜ் என்பது பலருக்கும் இப்போதைய சூழ்நிலையில் நடக்கும் நிகழ்வாக போய்விட்டது. அப்படி தெரியாமல் நடந்தால் அதற்கு அந்தப் பெண்ணை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். இதை மருத்துவ ரீதியாக மற்றும் குடும்ப சூழ்நிலையில் கொடுக்கும் ஆதரவால் அந்தப் பெண்ணை அந்த கஷ்டத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும். அது தவிர அனைவரும் அதை பெரிய பிரச்சனையாகி அந்த பெண்ணை குற்றவாளியாக மாற்றி அந்த பெண்ணையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வேதனையின் உச்சம்.

சில நாட்களுக்கு முன்பு கூட திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் உருக வைத்தது. ஆனாலும் இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இந்த மாதிரி அபத்தமான சீரியல்கள் தான். நான் ஒரு ஆண் என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பெண்ணை ஒரு மெஷின் போல பயன்படுத்திக் கொள்வதையே சீரியலிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி சீரியல்களை பார்ப்பதால் மனநோய் ஏற்பட்டுவிடும் என்று பிரபல மருத்துவர் ஒருவர் எச்சரித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கூட சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற ஒரு சில சீரியல்கள் காமெடியாகவும் இருந்தது. அதை பார்க்கும்போது பலர் மனம் லேசாகி இருந்தது. ஆனால் இப்போது உள்ள சீரியல்கள் அடுத்தவரை எப்படி பழிவாங்க முடியும்? தன் குடும்பத்துக்கே குழி தோண்டுவது எப்படி? மாமியார் மருமகள் சண்டை என்று கதை நகர்ந்து கொண்டிருப்பதால் இதனால் சமுதாயத்தில் பல சிக்கல்கள் வரப்போகிறது என்றும் அந்த மருத்துவர் கூறியிருக்கிறார்.
இந்த மாதிரி அபத்தமான சீரியல்களை பார்ப்பவர்களின் மனநிலை இதுபோல்தான் நம்முடைய வீட்டிலும் இருக்க வேண்டும் என்று அவர்களை அறியாமலே மாறிவிடும். தன்னுடைய அண்ணனோ தம்பியோ மனைவி சந்தோசமாக இருந்தாலும் பிடிக்காது. மாமியாருக்கு மருமகளும் மருமகளுக்கு மாமியாரும் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது என்ற ஒரு மனநிலை அவர்களை அறியாமலே ஆக்கிரமித்துக் கொள்ளும். ஒரு சில வில்லிகளைப் போன்றே தன்னுடைய மனதில் அவர்களை அறியாமல் அவர்களை கற்பனை செய்து கொண்டு வாழ்க்கையில் நிஜ வாழ்க்கையில் மாறத் தொடங்கி விடுவார்கள். அதனால் இந்த மாதிரி சீரியல்களை தவிர்த்து விடுவது உங்கள் மனதுக்கு மட்டும் அல்ல சமுதாயத்துக்குமே நல்லது தான்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications