பிரதீப்புக்கு ரெட் கார்டு ஏன்? கமலிடமே தைரியமாக கேட்ட விசித்ரா! பிக்பாஸில் பெற்ற ஊதியம் எவ்வளவு?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் 95 நாட்களை கடந்த நடிகை விசித்ராவுக்கு எத்தனை ரூபாய் சம்பளமாக கிடைத்தது என்பது தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன் இரு வீடுகள் என்ற செட்டப்பில் தொடங்கியது. இங்கு 5 வைல்ட் கார்டு என்ட்ரியுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளராக பிரதீப் ஆன்டனி, விசித்ரா ஆகியோர் சொல்லப்பட்டனர். இவர்களில் பிரதீப் ஆன்டனிக்கு சக போட்டியாளர்களின் புகாரின் பேரில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார்கள்.
இந்த நிலையில் வைல்ட் கார்டு ரவுண்டில் அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் உள்ளே வந்தனர். இவர்களில் அர்ச்சனாவும் ஸ்டிராங் கன்டெஸ்டென்ட்டாக அறியப்பட்டார். இந்தநிலையில் இவர் எதுக்கெடுத்தாலும் கத்துகிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அண்மையில் எல்லாருடனும் சண்டையிட்ட அர்ச்சனா, தற்போது விசித்ராவிடமும் சண்டையிட்டுள்ளார்.
இந்த பிக்பாஸ் சீசன் 14 ஆவது வாரத்தில் உள்ளது. தயாரிப்பாளர்கள் அண்மையில் ரூ 1 லட்சம் தொடக்கத் தொகையுடன் கேஷ் பாக்ஸ் திருப்பத்தை அறிவித்தனர். ரொக்கப் பெட்டியானது போட்டியாளர்களுக்குப் பெட்டியில் இருந்த பணத்தொகையுடன் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கொடுத்தது.
மூன்று நாட்களாக யாரும் எடுக்காமல் இருந்த நிலையில் இறுதியாக பூர்ணிமா ரவி கேஷ் பாக்ஸ் தொகையான ரூ 16 லட்சத்துடன் விளையாட்டை விட்டு வெளியேறினார். பூர்ணிமா பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் வார இறுதி நாட்களில் நடக்கும் எலிமினேஷன் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் இரட்டை எலிமினேஷன் இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் தமிழ் 7 இல் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்றார் என்ற அடிப்படையில் விசித்ரா இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக போட்டியில் கலந்து கொள்ளும் சீனியர்கள் முதல் வாரமோ அல்லது இரண்டாவது வாரமோ எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால் இந்த முறை விசித்ராதான் 97 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்தார். இளைஞர்களுடன் விசித்ரா கடுமையாக போட்டி போட்டார். இந்த நிலையில் அவர் பிக்பாஸில் பெற்ற சம்பளம் தொடர்பாக சில கருத்துகள் வெளியாகியுள்ளன.
அதன்படி அவருக்கு ஒரு நாளைக்கு ரூ 40 ஆயிரம் வழங்குவதாக ஊதியம் பேசப்பட்டது. அதன் அடிப்படையில் 95 நாட்கள் விளையாடிய விசித்ராவுக்கு ரூ 35 லட்சம் ஊதியமாக கொடுக்கப்பட்டது. விச்திரா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரு் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வலிமையாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர் எப்படி எலிமினேட் செய்யப்பட்டிருப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விசித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு அங்கிருந்த ஜட்ஜ்கள் வெங்கடேஷ் பட், தாமோதரன் ஆகியோர் பாசிட்டிவ்வான கமென்ட்டுகளையே கொடுத்திருந்தனர். விசித்ரா கேரளாவை சேர்ந்த ஹாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கேரளாவில் ஹோட்டல் உள்ளது. விசித்ராவுக்கு 3 மகன்கள் உள்ளனர். 90 களில் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார் விசித்ரா. இவருடைய தாய், தந்தை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications