ரஜினி நடிக்க வேண்டிய படத்திற்கு 3 மடங்கு சம்பளம் கேட்ட விஜயகாந்த்! ஷாக் கொடுத்த தாணு
சென்னை: ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க அணுகிய போது அவர் 3 மடங்கு சம்பளம் கேட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களே அடுத்தடுத்து படங்களை நடிப்பதும், அவர்களின் படங்களில் மட்டுமே ஹீரோ, ஹீரோயின்கள் நடிப்பதுமாக இருந்தது. இதனால் புதியவர்களுக்கு வாய்ப்பு என்பது இல்லாமல் இருந்தது.

சினிமா கனவுடன் எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் ஊரை விட்டு சென்னைக்கு வந்து பல நாட்கள் பட்டினி கிடந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தனர்.
அப்படி திரைப்பட கல்லூரியில் சேர்ந்தவர்கள் சினிமாவில் இயக்குநராவதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என சொல்லலாம். அவர்களது படங்களுக்கு தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டும் தாராளமாக கால்ஷீட் கொடுத்தும் விஜயகாந்த் உதவினார்.
இவ்வாறு விஜயகாந்த் அறிமுகப்படுத்தியவர்தான் சின்ன கவுண்டர் படம் எடுத்த ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர். அது போல் ஹீரோ, ஹீரோயின் என்ன சாப்பிடுகிறார்களோ, அதே உணவு, அதே தரத்தில் டெக்னீசியன்களுக்கும் வழங்க வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டார்.
விஜயகாந்த் தனது கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுத்திருக்கிறார். அது போல் தன்னை தேடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் அவர்களை கை தூக்கி விடும் வகையில் படம் செய்து கொடுத்திருக்கிறார்.
அவர் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில் அவர் நினைவலைகளை பல்வேறு பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் ஒரு சேனலுக்கு கலைப்புலி எஸ் தாணு, விஜயகாந்த் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் "விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என நினைத்து அவரின் நண்பர் ராவுத்தரை சந்தித்தேன். அதிக ஊதியம் சொன்னால் நான் ஓடிவிடுவேன் என நினைத்த ராவுத்தர், விஜயகாந்த் வாங்கும் ஊதியத்தை விட 3 மடங்கு அதிகமாக கேட்டார்.
அவர் கேட்டதுமே நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என நான் கேட்டதும் ராவுத்தர் ஷாக்காகிவிட்டார். அப்போது உருவான படம்தான் கூலிக்காரன். இந்த படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தோம்.
ஆனால் ரஜினிதான், இந்த கதை விஜிக்கு நன்றாக இருக்கும். அவரை வைத்து எடுங்கள் என சொன்னார்" என கலைப்புலி எஸ்.தாணு பேட்டி அளித்துள்ளார். இந்த படம் 1987 ஆம் ஆண்டு ரிலீஸானது.
இந்த படத்தை ராஜசேகர் இயக்கினார். இந்த படத்தில் விஜயகாந்துடன் ரூபினி, ஜெயசங்கர், ராதாரவி, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் எஸ்பிபி, எஸ் ஜானகி பாடிய குத்துவிளக்காக குலமகளாக பாடல் பிரபலமானது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications