மலையாள திரையுலகின் பொற்கனல்! உடலின் ஒவ்வொரு அசைவும் பேசும் வசனம்! யார் இந்த மோகன்லால்?
மலையாள சினிமாவின் வரைபடத்தில் மோகன்லால் ஒரு தனி கோடு. அவருடைய நடிப்பும், குரலும், கண்ணோட்டமும் ஒரு ரசிகனின் மனதில் நிரந்தரமாக பதிந்திருக்கும். இந்த கடல் போன்ற திறமைமிக்க நடிகரின் வாழ்க்கையும், திரைப்படங்களும் சுவாரசியமான பாதையில் பயணிக்கின்றன.
துவக்கம்
1980-களில் திரையுலகிற்குள் நுழைந்த மோகன்லால், Manjil Virinja Pookkal எனும் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். ஆனால் அப்போது யாருக்கும் தெரியாது - இந்த வில்லன் நாளைய மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருவார் என்று! தொடக்கத்தில் அவர் "ஹீரோ மாதிரி இல்ல" எனக் கூறியவர்கள், பின்னர் "அவரைப் போலவே யாரும் இருக்க முடியாது" என நினைத்தனர்.

மாறுபட்ட கலைஞன் - Mass + Class
மோகன்லால் என்றாலே, அதிரடி அதோடு அழுத்தமான உணர்வுகள். எதார்த்த நடிப்பின் அடையாளம், மறுபக்கத்தில் Thanmathra போன்ற படங்களில் மனதை உருக்கும் நடிப்பைக் காணலாம். அவருடைய முகபாவனைகள், இயல்பான உரையாடல்கள், அசைத்தாடும் கண்கள் - இவை அனைத்தும் ஒரு நடிப்புக்கலைஞனின் சாயலல்ல; உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
வசனம் இல்லாமல் பேசும் கண்ணாடி
மோகன்லால் நடிக்கும் சில காட்சிகளில் வசனம் தேவையில்லை. அவர் உடலில் ஒவ்வொரு அசைவும் கதை பேசும். பார்வையாலேயே கண்களை கலங்க வைக்கும். அவ்வளவு மௌனமும், அவ்வளவு வலியும்! இவர் படங்களில் வற்றாத தெளிந்த நீரோடை போல் இருக்கும்.
சினிமா ஒரு தொழிலா, இல்ல ஒரு தியானமா?
அவர் நடிப்பது தொழிலுக்காக இல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் வாழ்கிறார். அது ஒரு தியானம் போல. ஒருமுறை ஒரு ரசிகன், "மோகன்லால் சிரித்தால் நம்மையும் சிரிக்க வைக்கிறார்; அழுதால் நம்மையும் அழவைக்கிறார்" என்றார். அதுவே உண்மை.
மோகன்லால் த்ரில்லர், ஏக்ஷன் படைப்புகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவை. Irupatham Noottandu-வில் டைம் லெஸ் கங்ஸ்டர்; Rajavinte Makan, Narasimham போன்றவை மாஸ் கலாச்சாரத்தின் அடையாளங்கள். Company (ஹிந்தி) மற்றும் Lucifer போன்ற திரைப்படங்களில் அவர் காட்டிய ஸ்டைல், சரளமான ஆக்சன் சேர்ந்த பரிமாணம். Drishyam-ல் மைண்ட் கேம்ஸ்; Grandmaster, Villain போன்ற புகழ்பெற்ற இன்வெஸ்டிகேட்டிவ் கதைகளஅனைத்தும் அவரது பல்துறை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகின்றன. மோகன்லால் ஒரு ஒரிஜினல் அதிரடி பிராண்ட்!
ஒரு முகம், ஆயிரம் கதைகள்
மோகன்லால் ஒரு நடிகர் மட்டும் அல்ல; அவர் ஒரு காலப்பெயர்ச்சி. பல தலைமுறைகளின் திரை அனுபவங்களை இணைக்கும் உயிர் ஓட்ட பாதை. Drishyam மூலம் இன்றைய இளம் ரசிகன் அவரை கண்டறிகிறான்; ஆனால் 80களில் Rajavinte Makan மூலம் ஒருவரை உணர்ந்த ஒரு தலைமுறை இன்று வரை அதே முகத்தில் அதே மாயையை காண்கிறார். Narasimham-இல் அசலான மாஸ், Thanmathra-வில் நெஞ்சை உருக்கும் உணர்வு, Lucifer-இல் ஸ்டைலான லீடர் - அனைத்தும் ஒரே முகத்தில்! வருடங்கள் கடந்தாலும் அந்த நம்பிக்கையான பார்வை மட்டும் மாறவில்லை. மோகன்லால் என்பது வெறும் பெயர் அல்ல; அனுபவிக்க வேண்டிய உணர்வு.
மோகன்லால், இந்திய சினிமாவின் பலமுகத் திறமையாளர். 1980-ல் அறிமுகமான அவர், மலையாள திரையுலகில் வெகுகாலமாக ஒரே நேரத்தில் மாஸ், க்ளாஸ் இரண்டையும் சமநிலைப்படுத்திய ஒரே நடிகர். Bharatham, Vanaprastham, Drishyam, Pulimurugan போன்ற வெவ்வேறு வகை படங்களில் அவரது தனித்துவமான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகள், பத்மஶ்ரீ, பத்மபூஷண் போன்ற பல விருதுகள் பெற்றவர். குடும்பம், காதல், அரசியல், யுத்தம், த்ரில்லர் என அனைத்து கலைவழிகளிலும் கலக்கியவர். அவரது இயற்கையான நடிப்பு மற்றும் அழுத்தமான விழித்தோற்றம், ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும். அவர் ஒரு நடிகர் மட்டும் அல்ல, ஒரு காலத்தை நிர்ணயித்த தனி புரட்சி.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications