பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸை நினைவிருக்கிறதா? சர்ட் பாக்கெட்டில் கலர் கலராக என்ன வைத்திருப்பார் தெரியுமா?
சென்னை: பழம்பெரும் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸை நினைவிருக்கிறதா? அவர் சட்டப் பையில் ஒரு பொருளை கலர் கலராக வைத்திருப்பாராமே! ஏன் தெரியுமா? இதன் பின்னால் உள்ள சுவாரஸ்ய பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள். ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் மொழியில் கூட அருமையாக கவிதை எழுதினார்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அது போல் ஆங்கிலம், உருது உள்ளிட்ட 8 மொழிகளில் புலமை பெற்றவரும் ஆவார். மது வண்டு என்ற புனைப் பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார்.

வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப் பாடல்களை இவரே இயற்றினார். டி.எம். சவுந்திரராஜன் புகழின் உச்சியில் இருந்த போதும் ஸ்ரீனிவாஸும் புகழடைந்தார். தனது மென்மையான குரலில் காலங்களில் அவள் வசந்தம் என பாடிய பாடல் பெரும் புகழை தந்தது.
இவர் தமிழில் ஜெமினி கணேசனுக்கும் கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அநேகமாக அனைத்து படங்களிலும் பாடியுள்ளார். ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர் சென்னையில் தனது 82 ஆவது வயதில் உணவு சாப்பிடும் போது மாரடைப்பு ஏற்பட்டது. ஸ்ரீனிவாஸ் ஒரு கவிஞரும் ஆவார்.
பிரணவம் என்ற கவிதை தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் அவரே எழுதி வெளியானது. இவர் 2 லட்சம் கவிதைகள் வரை எழுதியிருக்கிறாராம். எந்த விழாவுக்கு வந்தாலும் சரி, அது திருமண விழாவோ பாராட்டுவோ அங்கும் தனது கவிதை எழுதி வாசிப்பாராம்.
காதல் கவிதை, தத்துவ கவிதை, பக்தி கவிதை என தனித்தனி கவிதைகளை தனித்தனி நிற பேனாக்களில் எழுதுவார். இதனால் தனது சட்டப்பையில் 6 அல்லது 7 நிறங்களில் பேனாக்களை வைத்திருப்பாராம். இவர் 1969 ஆம் ஆண்டு நிலவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கை பாராட்டி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை சீனிவாஸ் அவருக்கு அனுப்பியும் இருந்தார்.
ஒரு முறை சீனிவாஸின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், அவருக்கு இசையில் நல்ல எதிர்காலம் இல்லை என்றாராம். ஆனால் சீனிவாஸின் தந்தை , ஜோதிடரை நம்பாமல் தனது மகனின் திறமையை நம்பினாராம்.












Click it and Unblock the Notifications