Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினா தள்ளுவண்டி கடை டூ குக் வித் கோமாளி ஷோ! இளம் வயதிலேயே வீசிய புயல்! யார் இந்த சுந்தரி அக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து விற்பனை செய்து வரும் சுந்தரி அக்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களத்தில் இறங்கியது எப்படி என்பதை பார்க்கலாம்.

sundari akka

குக் வித் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா, ஷபானா ஷாஜஹான், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், சவுந்தர்யா சில்லுகுரி, ராஜு ஜெயமோகன், கஞ்சா கருப்பு, நந்தகுமார், சுந்தரி அக்கா ஆகிய 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் புகழ், ராமர், சரத், சுனிதா, சவுந்தர்யா நஞ்சுண்டன், சர்ஜின் குமார், பூவையார், தங்கதுரை, முகமது குரைஷி, டோலி ஆதிய 10 கோமாளிகள் கலந்து கொண்டனர்.

குக் விக் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கவுசிக் சங்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களில் சினிமா பிரபலங்களும், சீரியல், மீடியா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுந்தரி அக்கா குக்காக கலந்து கொண்டுள்ளார். அவர் பங்கேற்றது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்னர் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புதுவையை சேர்ந்தவர்

புதுவையில் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு 5 வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். இதனால் தாய், பாட்டியின் அரவணைப்பில் இவர் வளர்ந்துள்ளார். இவரது பாட்டி இட்லி கடை வைத்து பிழைப்பை நடத்தி வந்தாராம்.

உணவுத் தொழில்

எனவே பாட்டியிடம் வளர்ந்த சுந்தரிக்கு உணவு தொழில் மீது அதிக ஆர்வம் வந்தது. இதையடுத்து திருவல்லிக்கேணியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சுந்தரி சென்று வந்த போதுதான் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சேகருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சந்தோஷம் நிலைக்கவில்லை

இவர்களுக்கு இரு குழந்தைகள். சந்தோஷமாக சென்ற வாழ்வில் திடீரென புயல் வீசியது. ஆம்! இளம் வயதிலேயே சுந்தரி கணவரையும் இழந்துவிட்டார். இரு குழந்தைகளுடன் வறுமையில் இருந்த போது பாட்டியின் இட்லி கடை நினைவுக்கு வந்தது.

மெரினாவில் தள்ளுவண்டி கடை

இதனால் சென்னை மெரினாவில் தள்ளுவண்டியில் உணவு விற்பனையை சுந்தரி தொடங்கினார். அப்போது அவர் விற்கும் மீன் குழம்புக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்தனர். இதையடுத்து மெரினாவுக்கு சென்றாலே சுந்தரி அக்கா கடை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தார்.

பிரபலங்களும் மீன் குழம்புக்கு அடிமை

இவரது கடையை தேடி வந்து சாப்பிடுகிறார்கள். ரஜினி, சிம்பு உள்ளிட்டோர் தங்கள் பணியாளர்கள் மூலம் பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவதாக சுந்தரி அக்காவே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். யாராக இருந்தாலும் அன்புடன் வயிறார சோறு போடுவதில் சுந்தரி அக்காவுக்கு நிகர் அவரே!

ஷூட்டிங் டைம்

இந்த நிலையில் ஏற்கெனவே தமிழா தமிழாவில் சுந்தரி அக்கா கலந்து கொண்டார். அப்போது கூட "எனக்கு ஷூட்டிங் டைம் கரெக்ட்டா சொல்லியிருந்தால் நான் எல்லாருக்கும் மீன்குழம்பு செய்து கொண்டு வந்திருப்பேனே" என தொகுப்பாளர் ஆவுடையப்பனிடம் சொன்னார்.

மீன் வறுவலுக்கு என்ன மசாலா பயன்படுத்துகிறீர்கள் என கேட்ட போது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் என்றுதான் சொன்னார். ஸ்பெஷலாக எந்த மசாலாவையும் தான் பயன்படுத்துவதில்லை என குறிப்பிட்டார்.

ஹைடெக் ரெஸ்டாரண்ட்

சுந்தரி தற்போது திருவல்லிக்கேணியில் ஹைடெக் சுந்தரி அக்கா ரெஸ்டாரெண்ட் தொடங்கியுள்ளார். இங்கு தனது மருமகள்களையும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த ஒரு மகனையும் வைத்து சமாளிக்கிறார்.

ஊக்கம்

ஆனாலும் மீன் வாங்குவது சமைப்பது எல்லாமே சுந்தரி அக்காதான். இதனாலேயே டிவி சேனல்களில் வாய்ப்பு வந்தும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது பிள்ளைகளும் மருமகள்களும் கொடுத்த ஊக்கத்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் வெற்றி பெற்று, நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது உலகளவில் அவர் பிரபலமடைய வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+