பாடகியுடன் காரில் சல்லுனு போன ஜெயம் ரவி.. கரெக்ட்டா அதே நாளில்? இப்ப இதை வேற கிளப்பி விட்டுட்டாங்களா
சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினரின் பிரிவுக்கு , இன்னொரு காரணம் கற்பிக்கப்பட்டு வருகிறது.. இதையடுத்து கோவா பாடகி யார் என்று சோஷியல் மீடியாவில் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
காதலித்து மணம் முடித்த ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடியிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜெயம்ரவி தரப்பில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுதது, ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்த போட்டோக்களையும் டெலிட் செய்துவிட்டார்.

இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதனால் டைவர்ஸ் என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை. ஆனால், ஆர்த்தியின் அம்மா கொடுத்த டார்ச்சர், ஆர்த்தியின் அளவில்லாத செலவு, என யூகங்கள் றெக்கை கட்டி பறந்துவருகின்றன.
மாமியார்: மருமகன் ஜெயம்ரவியை வைத்து படம் எடுப்பதற்காக, டைரக்டர் பாண்டியராஜிடம் அட்வான்ஸ் தந்துவிட்டு, உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஜெயம்ரவியிடம் கேட்டுள்ளார் சுஜாதா விஜயகுமார். உடனே ஜெயரம் ரவியும் "அசாத்தியமான" சம்பளம் ஒன்றை கேட்டுள்ளார்.
இதைக்கேட்டதும் ஷாக் ஆன சுஜாதா, "உங்க மார்க்கெட்டு இப்போது இவ்வளவுதான், இதுதான் சம்பளம்" என்று சொல்லவும், அதை ஜெயம் ரவி சீரியஸா எடுத்துக்கிட்டு, வீராவேசம் பேசியதாகவும், இதனால், ஆர்த்தி தன்னுடைய அம்மாவுக்கு சப்போர்ட்டாக பேசவும், 10 நாள் ஜெயரம் ரவி காணாமல் போனதாகவும், பயில்வான் ரங்கநாதனும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
கோவா டிரிப்: Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடித்து வருவதாகவும், விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு ஜெயம் ரவி திடீரென கோவாவுக்கு தனியாக டூர் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. அதேபோல, சென்னையில் இருக்க பிடிக்காமல், கோவாவில் தனிமையில் வசித்து வருவதாகவும் மற்றொரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.
கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வலம்வரும் நிலையில், இதே கோவா பயணம் பற்றி மற்றொரு வதந்தி கிளம்பியிருக்கிறது.. அதாவது, கோவா சென்றபோது, ஜெயம் ரவியின் காரில் பாடகி ஒருவர் இருந்தாராம்.. பெங்களூரை சேர்ந்தவராம். ஏற்கனவே திருமணமானவர்.. இந்த பாடகி தமிழ் படங்களிலும், ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.. ஆன்மீக மன வளர்ச்சியாளராகவும் வலம் வருகிறாராம்.
பப்புகளில் பாடி வருவதால், கோவாவிலுள்ள பப்புகளிலும் பாடி வந்திருக்கிறார். அப்போதுதான் ஜெயம்ரவிக்கு நட்பானதாக கூறுகிறார்கள். திருமணத்திற்கு முன்பேயே ஜெயம் ரவிக்கு நட்பு இருந்ததால், பாடகியுடன் பலமுறை கோவா சென்று வந்ததாகவும் கூறுகிறார்கள்.
கார் கண்ணாடி: சமீபத்தில்கூட, அதாவது கடந்த ஜுன் 24ம் தேதி, தன்னுடைய சொகுசு காரில் காரில் பாடகியுடன் கோவா சென்றிருந்தாராம்.. அப்போது கார்களில் போடப்படும் டின்ட், அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக இருந்ததற்காக அபராதமும் விதித்திருக்கிறது கோவா போலீஸ்.. அதே நாளில் ஓவர் ஸ்பீடில் காரில் சென்றதற்காக அபராதமும் செலுத்தினாராம் ஜெயம் ரவி. திருமண தினத்தன்றுகூட, பாடகியுடன் காரில் சுற்றியதால்தான், இன்ஸ்டா போட்டோக்களை ஆர்த்தி நீக்கியதாக சொல்கிறார்கள்.
இந்த பாடகியுடனான கோவா டிரிப்தான், ஆர்த்தி குடும்ப விரிசலுக்கு காரணம் என்று இப்போது சிலர் கூறுகிறார்கள். முன்னதாக கோவாவில் ஜெயரம் ரவி இருப்பதாக தகவலறிந்து, அவரிடம் சமாதானம் பேச ஆர்த்தி முயன்றதாகவும், இதை முன்கூட்டியே அறிந்த ஜெயம் ரவி, அங்கிருந்த ஓட்டலை காலி செய்துவிட்டு, இன்னொரு ஓட்டலுக்கு சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த பாடகியுடனான கோவா டிரிப்தான், ஆர்த்தி குடும்ப விரிசலுக்கு காரணம் என்று இப்போது சிலர் கூறுகிறார்கள்.
கோவா பாடகி: நடிகை ஒருவருடன் ஜெயம் ரவி நெருக்கமாக இருந்ததே, மணமுறிவுக்கு காரணம் என்று சொல்லி கொண்டிருந்தவர்கள், இப்போது கோவா டிரிப் பற்றி கவனத்தை திருப்பி, ஊதி பெரிதாக்கி வருகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவரின் தனிப்பட்ட விவகாரத்தில் மூக்கை நுழைத்து, புரளிகளை கிளப்பி விட்டு வருவதால், பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களின் இமேஜையும் இது பாதிக்கவே செய்யும்.. எனவே உண்மை தெரியாமல் பேசக்கூடாது என்று இணையவாசிகளும், ஜெயம்ரவியின் ரசிகர்களும் கொந்தளித்து கூறி வருகிறார்கள்.
இதனிடையே, பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா, சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஜெயம் ரவிக்கும் சோபிதாவுக்கும் தொடர்பு என்றார்கள்.. அது முழுக்க முழுக்க கட்டுக்கதை..
கட்டுக்கதை: ஒருவேளை அது உண்மையானால், நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தத்தின்போதே அது அம்பலமாகியிருக்கும்.. சோபிதாவை இழுத்து வைத்து பேசியதுபோல, தேவையில்லாமல் தனுஷையும் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ போவதாக ஆர்த்தி ஆசைப்படுகிறார். நல்ல விஷயம்தான். இப்படி சொல்வதால், அவர்மீது மரியாதை ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
யூகங்கள் ஒருபக்கம் கிளம்பி கொண்டிருந்தாலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது. இதுவரை விவாகரத்து செய்துள்ள திரைப்பிரபலங்கள் பெரும்பாலும், தங்கள் பிரிவை சேர்ந்தே அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் ஜெயம் ரவி மட்டுமே அறிவித்துள்ள நிலையில், ஆர்த்தியின் முழு சம்மதம் இதற்கு கிடைக்குமா தெரியவில்லை. குழந்தைகளுக்காக சேர்ந்து வாழவும் தயாராக இருக்கிறார்.
ரசிகர்களின் விருப்பம்: பயில்வான் ரங்கநாதன் சொல்வதுபோல, ஜீவனாம்சம் கேட்கும் அளவுக்கு இவர்கள் விவகாரம் போகாது. ஆர்த்தியின் அம்மா, ஜெயம் ரவியின் பெற்றோரிடம் பேசி இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைப்பார்கள். பேரன்களுக்காகவாவது ஜெயம்ரவியின் பெற்றோர் நல்ல முடிவு எடுப்பார்கள்.. விட்டு கொடுத்து போகவேண்டும் என்று ஜெயம் ரவியையும் சமாதானப்படுத்துவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.. இதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications