Coolie: கூலி ஓவர்! அடுத்து லோகேஷ் கனகராஜ் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்க! அதிரடி சரவெடிதான்!
சென்னை: கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரும் யாரை போய் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள். அப்ப அடுத்த மாஸுக்கு ரெடியா?
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. இது ரஜினியின் 171 ஆவது படமாகும். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 14 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த படம் ரிலீஸுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார்.
முன்னதாக அக்னி தீர்த்த கடலில் குளித்து, 21 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கூலி பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
உபேந்திரா, செளபின் ஆகியோர் சென்னையிலேயே தங்க வேண்டிய அளவுக்கு அவர்களுக்கு இனி டிமான்ட் அதிகமாக இருக்கும் என்பதே படம் பார்த்தவர்கள் சொல்லும் கருத்தாகும்.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு நடிகருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் லோகேஷ் கனகராஜ், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் கமல், ரஜினியை அடுத்து ஆக்ஷன் கிங்குடன் கூட்டணியா என பலர் யூகித்து வருகிறார்கள்.
இவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை போல் கூலி படமும் செம ஹிட்டடித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவில் இந்த படம் நல்ல வசூலை குவித்துள்ளது.
அது போல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். எனினும் ரித்திக் ரோஷனின் வார் 2 படம் வெளியாகியுள்ளதால் வடஇந்தியாவில் கூலி படத்திற்கு அந்தளவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications