OTT App: ஓடிடிக்கு விற்க அவசரப்படாதீங்க... தியேட்டர்கள் திறந்துவிடுவார்கள்!
சென்னை: இயக்குநர் செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் இருவரும் தமிழக முதல்வரை சந்தித்து, தியேட்டர்களை விதிமுறைகளுடன் திறக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நேரத்தில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் படங்களை டிஜிட்டல் மீடியாவுக்கு அவசரப்பட்டு விற்று விட வேண்டாம் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பிடித்த மற்றும் வசூல் நடிகை என்று சொல்லப்படும் அனுஷ்கா நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிசப்தம் படத்தை அமேசான் கைப்பற்றி இருக்கிறது என்று தெரிந்துகொண்ட நிலையில் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை இப்படி இருக்கிறது.

அமேசான் இயங்குதளம்
கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலுக்கு வந்தாலும் வந்தது ஓடிடி இயங்கு தளங்களுக்கு வெகுவாக மவுசு கூடி இருக்கிறது. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படங்களில் தமிழ் படங்கள் மூன்று படங்களை அமேசான் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஷூட் செய்யப்பட்டு, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது நிசப்தம் படம்.

நிசப்தம் அமேசானுக்கா?
நிசப்தம் படத்தில் அனுஷ்கா லீட் ரோலில் நடித்து இருக்கார். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். படத்தைத் தயாரித்த வெங்கட் கூட இதே ஆர்வத்தில்தான் இந்த படத்தைத் தயாரித்து உள்ளதாகவும் கூறி இருக்கார். இந்த படத்தை டிஜிட்டல் வெளியீட்டு செய்ய தான் தயாராக இல்லை என்றும் இவர் தனது ட்வீட் பதிவில் தெரிவித்து இருக்கார்.

அமேசான் அறிவிப்பு
ஆனால், அமேசான் இயங்கு தளத்தின் நிசப்தம் படம் வெளியீடு செய்யப்படும் என்று அமேசான் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். தொடர்ந்து ஓடிடி இயங்கு தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் அதிருப்தியிலும் உள்ளனர்

சஸ்பென்ஸ் திரில்லர்
சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த இந்த படத்தில் வசனம் இல்லை என்பது இந்த காலத்துக்கு கொஞ்சம் புதுமை. இந்த படத்தை அமேசான் கைப்பற்றினால் தமிழ் இன்டஸ்ட்ரிக்கு இது மூன்றாவது படம் என்றாலும், தெலுங்கு இன்டஸ்ட்ரிக்கு இதுதான் முதல் படமாம். கலக்கத்தில் இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.












Click it and Unblock the Notifications