Dude box office: தீபாவளிக்கு சரவெடியாய் வெடித்த 'டியூட்’ வசூல்.. அதுவும் 100 கோடி வசூலை நோக்கி பாயும் ஹிட்!
சென்னை: தமிழ் சினிமாவின் 'யூத் ஐகான்' ஆக மாறியிருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியான 'டியூட்' திரைப்படம், இப்போது உலகமெங்கும் வசூல் வேட்டையில் இறங்கி,100 கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படம், விடுமுறை நாட்களைத் தனது வசூல் திருவிழாவாக மாற்றியுள்ளது.

டியூட் தான் நம்பர் 1
'டியூட்' திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே உலகளவில் 83 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதாக, இப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம், உலகெங்கிலும் தீபாவளிக்கு வெளியான இந்தியப் படங்களில் 'டியூட்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
ஓபனிங் கலெக்ஷன்
முதல் நாளில் மட்டும் இப்படம் உலகளவில் 22 கோடி ரூபாய் வசூலித்தது, இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை உறுதி செய்தது. 'டியூட்' திரைப்படம் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், குடும்ப ஆடியன்ஸுக்கும் பிடிக்குமாறு ஒரு முழுமையான பேக்கேஜாக வெளிவந்துள்ளது. அகன் என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனும், குறள் என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
சரத்குமாரின் மாறுவேடம்
இதுவரை காணாத வித்தியாசமான தோற்றத்தில், அமைச்சர் அதியமான் அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருப்பது அனைவரின் மனதையும் கவர்ந்து, ஷோ ஸ்டீலராக மாறியுள்ளார். முந்தைய பிரதீப் ரங்கநாதன் படங்களைப் போலவே, 'டியூட்' படத்திலும் இளைஞர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அதே சமயம், குடும்ப உறவுகள், நட்பு, காதல் போன்றவை ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் இப்படத்தில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனால் காட்டப்பட்டுள்ளது.
விமர்சனம்
இந்த படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், "இந்தத் தீபாவளிக்கு ஒரு பக்கா ஃபன் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் 'டியூட்'தான்" என்பதே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் குடும்பப் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
5வது நாள் வசூல்
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து நேற்றும் (அக்டோபர் 21 தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தினம் என்பதால், 'டியூட்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு வசூலில் எதிரொலித்தது. அக்டோபர் 21 ஆம் தேதி மட்டும் இப்படம் தமிழகத்தில் 6.63 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. உலகளவில் இந்த ஒரு நாளில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
மொத்த வசூல்
இதனால், 5 நாட்கள் முடிவில் 'டியூட்' திரைப்படம் உலகளவில் 93 முதல் 95 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் ஹிட் படமான 'டியூட்', இன்று அல்லது நாளை 100 கோடி ரூபாய் என்ற இமாலய வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications