Dude OTT: டியூட் ஓடிடிக்கு வந்தாச்சு! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Dude OTT release) தமிழ் சினிமாவுல இப்போ 'டிரெண்ட் செட்டர்'ன்னா அது பிரதீப் ரங்கநாதன்தான்! அவர் படம் ரிலீஸ் ஆகுதுன்னாலே, Gen Z பசங்க ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு போயிடுறாங்க. அந்த வரிசையில, தீபாவளிக்குப் பட்டாசா வெடிச்ச படம் தான், 'டியூட்'! தியேட்டர்ல 100 கோடிக்கு மேல வசூல் செஞ்சு சக்கைபோடு போட்ட இந்த ரோம்-காம் எண்டர்டெயினரை இப்போ ஓடிடிலப் பார்க்கப் போறோம்! அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இப்போ வந்தாச்சு.

Pradeep Ranganathan Netflix OTT

டியூட் கதை இதுதான்

சும்மா 'லவ் ஸ்டோரி'ன்னா பிரதீப் நடிக்க மாட்டார்! இந்தப் படத்துல காதல், ஃபிரெண்ட்ஷிப், ட்விஸ்ட்னு எல்லாமே இருக்கு. ஆனா, செம போல்டான ஒரு விஷயத்தைப் பத்திப் பேசியிருக்கார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். பிரதீப் ரங்கநாதன், எப்போதும் அடுத்தவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உதவி செய்யுற 'டியூட்'டா வலம் வராரு. இவரோட மாமா பொண்ணு குறள் (மமிதா பைஜு) இவர் மேல லவ்வுல இருக்காங்க. ஆனா, அகன் அந்த காதலை ஆரம்பத்துல மறுத்துடுறாரு.

ட்விஸ்ட்

கொஞ்ச நாள்ல அகனுக்குக் குறள் மேல லவ் வந்திடுது. ஆனா, இப்போக் குறள் வேறொருத்தரை லவ் பண்றாங்க! இவங்களோட அப்பா, மினிஸ்டர் சரத்குமார் (அதியமான் கேரக்டர்), சாதியைக் காரணம் காட்டி, அந்தக் காதலுக்கு எதிரா நிக்கிறாரு! ஒருக்கட்டத்துல, குறள் தன்னோட லவ்வருக்காகத் தற்கொலை முயற்சி பண்ண, சரத்குமாரிடம் இருந்துத் தப்பிக்க, அவரும் பிரதீப்பும் கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி ஒருப் ப்ளான் போடுறாங்க! பிறகு டிவோர்ஸ் பண்ணிட்டு லவ்வருடன் சேரலாம்னு நினைக்கிறாங்க.

ஆனா, அதுக்குப் பிறகு நடக்குறக் குழப்பங்கள், ட்விஸ்ட், ஃபைனலா அந்த 'ஆணவ'க் கொலை சிந்தனைக்கு கொடுக்கிற பதிலடி தான் இந்தப் படத்தோட கதை.

பிரதீப் ராஜ்ஜியம்! - மமிதா செம கியூட்

இந்தப் படத்தோட கதையை தாண்டி, பிரதீப் ரங்கநாதனோட எனர்ஜிக்காகவேப் பலரும் தியேட்டருக்குப் போனாங்க. பிரதீப் ரங்கநாதன், இந்தப் படத்துல தனுஷ் + பிரபுதேவா கலவை போலத் துள்ளல், கோபம், சோகம்னு எல்லா எமோஷனலையும் டெலிவரி பண்ணியிருக்காரு. அவருடைய 'ஸ்டைல்' (சோப்பு, சாக்லேட், கூலிங் கிளாஸ்னு எல்லாத்தையும் தூக்கிப் போடுறது), ஒன்-லைன் கவுண்ட்டர்கள்னுப் படம் முழுக்க அவர் பண்ணுற அட்ராசிட்டிக்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.

மமிதா

தமிழில் அறிமுகமான மமிதா பைஜு, அழகா, துறுதுறுன்னு நடிச்சு, பிரதீப்புக்குச் சரியான ஜோடியா நின்னிருக்காங்க. இவர் நடிப்பு பல இடங்களில் பிரதீப்பை விட ஸ்கோர் பண்ணியிருக்குன்னுதான் சொல்லணும். மினிஸ்டர் அதியமான் கேரக்டர்ல சரத்குமார், காமெடியும், டெரருமா மிரட்டியிருக்காரு.

விமர்சனமும் சர்ச்சையும்

Gen Z தலைமுறையினர் இந்த படத்தைத் 'தீபாவளிச் சரவெடி' போலக் கொண்டாடினாங்க. முக்கியமா, "இந்த 2025 வருஷத்திலும் தன் பொண்ணை லவ் பண்ணதுக்கு கொலை செய்யணும்னு நினைக்கறதுதான் வல்கர். நான் நினைக்கிறது வல்கர் இல்லை"னு பிரதீப் பேசுற வசனம் ரொம்ப யதார்த்தமா இருக்குன்னுப் பாராட்டினாங்க.

டியூட் ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் 100 கோடி வசூல் பண்ணின இந்தப் படம், இப்போ ஓடிடி-யில வர்றதுக்காகப் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பிருக்கு. 'டியூட்' திரைப்படம், நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்துல நவம்பர் 14ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகப் போகுதுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க!. தியேட்டர்ல டிக்கெட் கிடைக்காம தவறவிட்டவங்க, இல்லாட்டி இன்னும் ஒரு தடவை பிரதீப்போட அட்ராசிட்டியைப் பார்க்கணும்னு நினைக்கிறவங்க எல்லாரும், நவம்பர் 14-க்காக வெறித்தனமா காத்திருக்காங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+