ஒரே ராத்திரியில் நடு ரோட்டுக்கு வந்துட்டோம்..வாழ்க்கையில் நடந்த ஏமாற்றம்..மனம் திறந்த வடிவுக்கரசி
சென்னை: நடிகை வடிவுக்கரசி தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் கஷ்டங்கள் காரணமாக தன்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறி இருக்கிறார்.
நடிகை வடிவுக்கரசியின் திருமண வாழ்க்கையும் தோல்வியில் தான் முடிவு அடைந்திருந்ததாம்.
வெள்ளி திரையில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடத்திலும், மிரட்டலான வில்லியாகவும் நடித்து தற்போது சின்ன திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வடிவுக்கரசி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய நடிப்பு அனுபவம் மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அதில் ஆரம்பத்தில் நடிகை வடிவுக்கரசி பியூசி படித்து முடித்ததும் ஒரு ஸ்கூலில் எல்கேஜி, யுகேஜி பாடம் எடுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

ஒரு டீச்சராக இவருடைய பயணம் தொடங்கி இருக்கிறது. வடிவுக்கரசி டீச்சர் ஆக இருக்கும் போது அவருக்கு 70 ரூபாய் மாதம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். நாட்கள் செல்ல செல்ல இவருடைய குடும்பத்திற்கு அது போதாது என்று பிறகு தான் ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஒரு மேனேஜ்மென்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து இருந்தாராம்.
ஆரம்பத்தில் நடிகை வடிவுக்கரசியின் குடும்பம் பெரிய அளவில் வசதியாக தான் இருந்திருக்கிறார்கள். அப்போது இவருடைய அப்பாவும் திரை துறையில் இருந்திருக்கிறார். சித்தப்பாவும் திரைத்துறையில் இருந்திருக்கிறார். திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவர்கள் வாழ்க்கை ஒரே அடியாக மாறிவிட்டதாம். ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்தது போல இவர்கள் வாழ்க்கை மாறி இருக்கிறது. அதற்கு பிறகு தான் வடிவுகரசி தொடர்ந்து வேலைகளுக்கு முயற்சி செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் பேப்பரில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விளம்பரம் வந்திருப்பதை இவருடைய துணிக்கடை ஓனர் வடிவுகரசி இடம் கூற அதற்கு வடிவுக்கரசியும் முயற்சி செய்திருக்கிறார். அப்படித்தான் வடிவுக்கரசிக்கு நடிக்க அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இவருக்கு காதல் சீன் வராது என்றும் அதுபோல எனக்கு டான்ஸ் ஆட வராதாம், அதனால் அம்மா அல்லது அக்கா போன்ற கேரக்டர் வேண்டும் என்று இவராகத்தான் கேட்டு வாங்கினாராம்.
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை வடிவுக்கரசியின் கேரக்டர் கதாபாத்திரமாகவே மாறிவிடும். குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியை மிரட்டும் அந்த பாட்டியை யாராலும் மறக்க முடியாது. பார்க்கும் ரசிகர்களுக்கு கூட பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு அவருடைய பார்வையில் கோபமும் வெருப்பும் இருக்கும். அப்படி நடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டாலும் அது எனக்கு பிடித்தது என்று கூறி இருக்கிறார்.

நடிகை வடிவுக்கரசி வாழ்க்கையில் பிரச்சனைகள் அடுத்தடுத்து ஆரம்ப காலகட்டத்தில் வந்திருக்கிறது. அவருடைய திருமண வாழ்க்கையும் இவர் எதிர்பார்த்தபடி இல்லையாம். இவருடைய கணவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய கணவர் இவரை விட்டு விட்டு விலகி சென்று விட்டாராம். அதற்கு பிறகு இவருக்கு இருந்த ஒரே மகளையும் அவருடைய அம்மா தான் வளர்த்து வந்திருக்கிறார். தன்னுடைய அம்மாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தான் இவர் நடிக்க சென்றிருந்தாராம்.
தன்னுடைய குழந்தையை வளர்க்காத நான் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும் என்னுடைய குழந்தையின் குழந்தையான என்னுடைய பேத்தியை நான் தான் பார்த்து பார்த்து வளர்த்து வருகிறேன் என்றும் கூறுகிறார். அதோடு கணவனும் மனைவியும் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து இருக்க வேண்டும் என்று பல அறிவுரைகளையும் வடிவுக்கரசி கூறி இருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications